Simbu Net Worth - சிம்பு பிறந்தநாள்.. எஸ்டிஆரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.. தலையே சுத்துதே
சென்னை: எஸ்டிஆர், அட்மேன் என்று கொண்டாடப்படுபவர் சிம்பு. சில வருடங்களுக்கு முன்பு அவரை பற்றி பெரும்பாலானவர்கள், இனி சிம்பு அவ்வளவுதான் என்று கருத்து தெரிவித்தார்கள். இப்போதோ அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தில் நடித்துவருகிறார். தன்னை பற்றி குறைத்து மதிப்பிட்டவர்களுக்கு எல்லாம் தன்னுடைய செயல்கள், வெற்றியின் மூலம் பதிலடி கொடுத்துவருகிறார். இந்நிலையில் அவர் இன்று தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார்.
சிறு வயதிலிருந்தே நடித்துவரும் சிம்பு நடிகராக மட்டுமின்றி பாடலாசிரியர், பின்னணி பாடகர், இயக்குநர், சிறந்த நடன கலைஞர் என பல திறமைகளை கொண்டிருப்பவர். கோலிவுட்டில் கமல் உள்ளிட்ட மிக சிறந்த நடிகர்களுக்கு பிறகு அதிக திறமைகளை கொண்டிருக்கும் நடிகர்களில் ஒருவர். தன்னை பற்றி யார் என்ன பேசினாலும் அதையெல்லாம் அசால்ட்டாக ஹேண்டில் செய்துவிட்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
இடையில் சறுக்கல்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த அவருக்கு இடையில் ஒரு காதல் தோல்வி ஏற்பட்டது. ஏற்கனவே முதல் காதலும் தோல்வியடைந்திருந்தது. இப்படி இரண்டு காதல்கள் முடிந்து போனதால் கொஞ்சம் அவரது கவனம் ஆன்மீகம் நோக்கி சென்றது. இமயமலைக்கு எல்லாம் சென்று வந்தார். எனவே இனிமேல் சிம்பு திரைத்துறையில் தடம் பதிக்க முடியாது; அவரது இடத்துக்கு இன்னொருவர் வந்துவிடுவார் என்றெல்லாம ஆரூடங்கள் கூறப்பட்டன.

கம்பேக் தந்த சிம்பு: ஆனால் அந்த சீன்லாம் இங்கே இல்லை என்கிற ரீதியில் தனது அனைத்தையும் மாற்றி மாநாடு படத்தில் தரமான கம்பேக் கொடுத்தார். அந்தப் படம் நூறு கோடி ரூபாய் வசூல் செய்தது. தொடர்ந்து நடித்த பத்து தல, வெந்து தணிந்தது காடு, தக் லைஃப் ஆகிய படங்களில் வெந்து தணிந்தது காடு மட்டும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தக் லைஃப் படம் தோல்வியடைந்தாலும் அதில் சிம்புவின் நடிப்பு அட்டகாசமாக அமைந்துவிட்டது.
வெற்றிமாறனுடன் அரசன்: அடுத்ததாக வெற்றிமாறன், அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கிறார். இப்போது அரசன் பட ஷூட்டில் மும்முரமாக இருக்கிறார். படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. விஜய் சேதுபதி முக்கியமான கேரக்டரை ஏற்றிருந்த நிலையில் அவர் இப்போது விலகிவிட்டார். அரசன் படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது.
சிம்புவின் பிறந்தநாள்: தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணி எப்படி ஹிட் படங்களை கொடுத்ததோ அதே மாதிரியான வெற்றி படங்களை கொடுப்பதற்கு அரசன் முதல் விதையை போடும் என்பது எஸ்டிஆர் ரசிகர்களின் நம்பிக்கை. சூழல் இப்படி இருக்க இன்று அவர் தனது 43ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அனைவரும் அவருக்கு தங்களது வாழ்த்தினை சொல்லிவருகிறார்கள். இந்நிலையில் அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது.
சிம்பு சொத்து மதிப்பு: அவரிடம் மொத்தம் 100லிருந்து 120 கோடி ரூபாய் வரை சொத்து மதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அவரது பங்களாவில் ரெக்கார்ட் ஸ்டூடியோக்கள் இருக்கின்றன. அவற்றில்தான் பாடல்களை உருவாக்குவார் எஸ்டிஆர். மேலும் ஒரு படத்துக்கு 20 கோடி ரூபாய் சம்பளமாக வாங்குகிறார் என கூறப்படும் நிலையில்; அவருக்கு வெந்து தணிந்தது காடு தயாரிப்பாளர் 90 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு சொகுசு காரை கொடுத்தார். அதுமட்டுமின்றி இன்னும் சில சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். அதன் மதிப்பு சில கோடிகள் பெறும் என சொல்லப்படுகிறது. இந்தத் தகவல்கள் எல்லாம் பல்வேறு தரப்பினராலும் சில ஊடகங்களாலும் கொடுக்கப்பட்டவை என்பது நினைகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











