அடேங்கப்பா.. 42 வயதில் சிம்புவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?.. செம கெத்து

சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கியிருக்கிறார். அதன்படி அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது; அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. மாநாடு படத்துக்கு பிறகு அவ நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களும் அவருக்கு நல்ல ஹிட்டையே கொடுத்தன. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்திலும் நடித்துவருகிறார்.
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துவரும் சிம்பு இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார் அவர். இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக வழியில் சென்ற அவர் சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதேசமயம் அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்தவகையில் அவர் வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் அவர் ரொம்பவே பருமனாக காணப்பட்டார்.
simbu tamil cinema kollywood
தரமான கம்பேக்: அதனைப் பார்த்து ஒருதரப்பினர் கிண்டலும் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் சிம்புவின் எனர்ஜியை பார்த்த ரசிகர்கள், அட நம்ம எஸ்டிஆர் பழையபடி வந்துட்டாரே என்று உற்சாகத்தோடு கூறினார்கள்.
செம பெயர்: அடுத்ததாக அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்தார். அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சிம்புவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. படத்தின் அறிவிப்பு வந்தாலும் ஷூட்டிங் இன்னும் தொடங்கியபாடில்லை.
simbu tamil cinema kollywood
தக் லைஃப்: இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வந்தது. அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டானார் சிம்பு. அப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரிலும் சிம்புவின் கெட்டப்பும், நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். மேலும் பார்க்கிங் பட இயக்குநருடனும் அவர் இணைந்திருக்கிறார்.
சிம்பு சொத்து மதிப்பு: இந்நிலையில் சிம்பு இன்று தனது 42ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். சூழல் இப்படி இருக்க அவரது சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இவர் ஒரு படத்துக்கு 20 கோடி ரூபாய்வரை சம்பளமாக வாங்குகிறாராம். அதேபோல் மொத்தமாக 130 கோடி ரூபாய்வரை மொத்த சொத்து இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சென்னையில் சொந்தமாக சொகுசு வீடு ஒன்றும், சில சொகுசு கார்களும் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X