விஜய் சேதுபதிக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட சிம்பு: வைரலான புகைப்படம் #CCV
Recommended Video

சென்னை: செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பின்போது சிம்பு விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிவிட்டுள்ளார்.
விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த்சாமி, அருண் விஜய், ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி உள்ளிட்டோரை வைத்து மணிரத்னம் இயக்கி வரும் படம் செக்கச் சிவந்த வானம்.
நட்சத்திர பட்டாளத்தை இயக்குவது மணிரத்னத்திற்கு கஷ்டமே இல்லை.
விஜய் சேதுபதி
செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பு தளத்தில் சிம்பு விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிவிட்டுள்ளார். இந்த கண் கொள்ளாக் காட்சி நடந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

நட்பு
படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி அனைவருடனும் நட்புடன் பழகுவார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிம்புவும், விஜய் சேதுபதியும் நண்பர்களாகியுள்ளனர்.

இயக்குனர்
சிம்பு முன்பு போன்று இல்லை. தற்போது ஆளே மாறிவிட்டார். சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருகிறார். இயக்குனர் சொல்வதை கேட்டு நடிக்கிறார். அவரின் மாற்றம் அனைவருக்கும் பிடித்துள்ளது.

நல்லா இருக்கு
சிம்பு எப்படி இவ்வாறு மாறினார் என்று தெரியவில்லை. ஆனால் இந்த மாற்றம் நன்றாக இருக்கிறது. காவிரி பிரச்சனை குறித்து பேசிய சிம்பு தற்போது கன்னட படத்தில் பாடல் பாடியுள்ளார். காவிரி தொடர்பான அவரின் கோரிக்கையை ஏற்று கன்னட மக்கள் தமிழர்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுத்தது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











