விஜய்யின் ஜனநாயகன் பிரச்னை.. எந்த நடிகரும் சொல்லாததை ஓபனாக சொல்லி அடித்த சிம்பு.. எஸ்டிஆர் சூப்பர்
சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த மாதமே வந்திருக்க வேண்டியது. ஆனால் சென்சார் அதிகாரிகள் கொடுத்த பிரச்னையால் ரிலீஸாகவில்லை. இப்போது அந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. எப்போது ரிலீஸாகும் என்று தெரியவில்லை. இந்நிலையில் ஜனநாயகன் பற்றி சிம்பு சமீபத்திய பேட்டியில் பேசியிருக்கும் விஷயம் சோஷியல் மீடியாவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்துவிட்டு சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். அதாவது படத்தில் மதத்தை புண்படுத்தும் காட்சி இருப்பதாக ஒரு அதிகாரி சொன்னதை கேட்டு இந்த முடிவை எடுத்திருக்கிறது தணிக்கை வாரியம். அதனைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது கேவிஎன் நிறுவனம். தனி நீதிபதி முதலில் விசாரித்தபோது தீர்ப்பு சாதகமாக வந்தது. தொடர்ந்து மேல்முறையீட்டில் தணிக்கை வாரியத்துக்கு சாதகமாக அமைந்தது.
மீண்டும் நீதிமன்றத்தில்: இதனையடுத்து உச்ச நீதிமன்றம் கைவிரித்துவிட; மீண்டும் கடந்த மாதத்தில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் விசாரணையை மேற்கொண்டார்கள். எப்படியும் இவ்விவகாரத்துக்கு பெரிய முற்றுப்புள்ளியை வைத்துவிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது; அவர்களோ மீண்டும் இந்த வழக்கை தனி நீதிபதியே விசாரிக்க வேண்டும் என்று; வழக்கை ஆரம்பித்த இடத்திலேயே நிறுத்தி வைத்தார்கள். இதனால் பெரிய ஏமாற்றம்தான் வந்தது.

எப்போது விசாரணை?: நீதிமன்றம் ஜனநாயகன் வழக்கை மீண்டும் எப்போது விசாரணைக்கு எடுக்கும் என தெரியவில்லை. இதனால் பிப்ரவரி பத்தாம் தேதிக்குள் படம் ரிலீஸாகிவிடும் என்ற கனவு பொய்த்துவிட்டது. இது அத்தனையுமே அரசியல் காரணமாகத்தான் நடப்பதால் 2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்க்கு பக்கபலமாக நின்று எதிர்க்கட்சிகளை ஓடவிட வேண்டும் என்றும் ரசிகர்கள் ஓபனாக சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
சிம்பு பேட்டி: இந்த பிரச்னை பற்றி பெரும்பாலானவர்கள் திரைத்துறையிலிருந்து பேசவில்லை. சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஜனநாயகன் விஜய்னு பிரிச்சி பார்க்க முடியாது இத்தனை வருஷம் சினிமாவுல இருந்திருக்கார். கடைசியா ஒரு படம் பண்ணி இருக்கார் அது திரையிக்கு வரணும்னு சினிமாத்துறைல ஒரு ஆதரவா அவருக்காக நிக்கணும்னு சொல்லி இருந்தேன் அதனால தான் நான் ட்வீட் போட்டிருந்தேன்.
அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்: எனக்கு அரசியல் தெரியாது அதில் அனுபவமும் கிடையாது அரசியல் பத்தி பேசுறதுக்கு நான் சரியான ஆளு கிடையாது. அவரோட அரசியல் எதிர்காலத்துக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளை சொல்லிக்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார். அவரது இந்தப் பேட்டி விஜய் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது. மற்ற நடிகர்கள் பேச்சுக்கு ஜனநாயகனை பற்றி ஒருமுறை பேசிவிட்டு விட்டுவிட்டார்கள். சிம்புதான் இன்னொருமுறை ஜனநாயகன் பற்றி பேசியிருக்கிறார் என தங்களது நன்றியை தெரிவித்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











