துபாயில் அஜித் வீட்டுக்கு பக்கத்துல சிம்பு ஒரு வில்லாவே வாங்கிட்டாரா?.. அதுவும் இத்தனை கோடியா?

சென்னை: தமிழ் சினிமாவில் இப்போதைக்கு பல சினிமா பிரபலங்களை கோடம்பாக்கத்திலோ, சாலிகிராமத்திலோ எல்லாம் பார்க்க முடியாது. ட்யூன் வாங்க வேண்டும் என்றால் கூட துபாய்க்குத்தான் போக வேண்டிய நிலை உள்ளது.

நயன்தாரா, யுவன் சங்கர் ராஜா, அஜித் குமார், த்ரிஷா, சிம்பு ஏன் நம்ம மாதம்பட்டி ரங்கராஜே துபாயில் புதுசா ஹோட்டல் திறந்த நிலையில், அடிக்கடி அங்கே தான் இருப்பதாக கூறுகின்றனர்.

Simbu buys a big villa with whopping 57 crores next to Ajith Kumar s Dubai house buzz stuns fans

சென்னையில் இருந்து வெறும் 4 மணி நேர விமான பயணத்தில் துபாய் சென்று எந்தவொரு தொல்லையும் இல்லாமல் ஃப்ரீ பேர்டாக சுற்றித் திரிய நட்சத்திரங்கள் துபாயை தேர்ந்தெடுத்துள்ளனர். பல சினிமா பிரபலங்களுக்கு துபாய் அரசு கோல்டன் விசா எல்லாம் வழங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

அஜித்தை சந்தித்த சிம்பு: மலேசியாவில் அஜித் கார் ரேஸிங் செய்த போது அவரை நடிகர் சிம்பு நேரில் சென்று சந்தித்த காட்சிகள் எல்லாம் வைரலாகின. துபாயில் அஜித் கார் ரேஸ் செய்த போது நடிகை நயன்தாரா சென்று அஜித் குமாரை சந்தித்தார். ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க வேண்டாம் என அஜித் முடிவெடுத்த பின்னர், இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டதாக பல தகவல்கள் பரவிய நிலையில், அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தனர். அதே போல த்ரிஷாவையும் நயன்தாரா சந்தித்து நாம எல்லாரும் ஃபிரெண்ட்ஸ் என்றார். கூடிய சீக்கிரமே தனுஷையும் சந்தித்தாலும் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வலைப்பேச்சு டீம் உடனே நட்பை வளர்த்து விட்டாரே.

Simbu buys a big villa with whopping 57 crores next to Ajith Kumar s Dubai house buzz stuns fans

அஜித் வீடு அருகே வில்லா: நயன்தாரா ஒரு பக்கம் துபாயில் தனது சொத்துக்களையும் நண்பர்களையும் சேர்த்து வரும் நிலையில், சிம்பு அஜித் குமாரின் வீட்டருகே ஒரு பெரிய வில்லாவையே வாங்கியுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. துபாயில் உள்ள அஜித் வீட்டுக்கும் சிம்பு வீட்டுக்கும் வெறும் ஒரு கிலோ மீட்டர் தான் இடைவெளி எனக் கூறுகின்றனர்.

இத்தனை கோடியா?: மேலும், சிம்பு புதிதாக வாங்கியுள்ள வில்லாவின் விலை 57 கோடி ரூபாய் என்றும் துபாயில் பிசினஸ் மேனாகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் கண்ணா ரவி தான் சுமார் 22 கோடி அட்வான்ஸ் தொகை கொடுத்து சிம்புவுக்கு அந்த வில்லா வாங்க உதவினார் என்றும் கூடிய சீக்கிரமே சிம்பு கண்ணா ரவி தயாரிப்பில் நடிப்பார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. ஆனால், இதுதொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை சிம்பு தரப்பில் இருந்து வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அரசன்: இந்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு அரசன் படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. விறுவிறுப்பாக அரசன் படத்தை எடுத்து முடிக்க சிம்புவும் வெற்றிமாறனும் அதிக வேகம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X