நான் பேசமாட்டேன்…! படம் பேசும்..! நச்சென்று சொன்ன சிம்பு!
சென்னை: நான் பேசமாட்டேன் படம் பேசும் என சிம்பு தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் அர்விந்த் சாமி, விஜய் சேதுபதி, சிம்பு, அருண்விஜய், ஜோதிகா, அதித்தி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ், டயானா எரப்பா மற்றும் பலர் நடித்திருக்கும் திரைப்படம் செக்க சிவந்த வானம்.

இப்படத்தின் பாடல் வெளீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்வில், கவிஞர் வைரமுத்து, அரவிந்த் சாமி, பாடகர் கார்த்திக், சுகாசினி மணிரத்னம், அருண் விஜய், ட்ரம்ஸ் சிவமணி, நடிகர் தியாகராஜன், மன்சூர் அலிகான், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நடிகர் சிம்புவை மேடைக்கு அழைத்தபோது, படத்தில் வாய்ப்பளித்த மற்றும் படத்திற்காக உழைத்த எல்லோருக்கும் நன்றி கூறிய சிம்பு, படத்தை பற்றி நான் பேச மாட்டேன். படம் பேசும் எனக் கூறினார்.
நடிகர் அரவிந்த் சாமியிடம் நீங்கள் இப்படத்தில் நல்லவரா கெட்டவரா எனக் கேட்கப்பட்டதற்க்கு எனக்கே தெரியாது என பதிலளித்தார். இரண்டாவது முறையாக மணிரத்னம் படத்தில் பணியாற்றுகிறீர்களே என அதித்திராவிடம் கேட்கப்பட்டதற்கு, அதற்கு மணிரத்னம் அவர்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும், குறிப்பாக இப்படத்தில் அரவிந்த் சாமியுடன் பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.
கவிஞர் வைரமுத்து பேசும்போது, இதற்கு முந்தைய படங்களில் உள்ள அனுபவத்தை பகிர்ந்துகொண்டார். இப்போது இருப்பதுபோல் எப்போதும் இந்த உறவு தொடர வேண்டுமெனக் கூறினார்.
மணிரத்னம், வைரமுத்து மற்றும் ஏஆர்.ரஹ்மானிடம் இதுவரை பணியாற்றிய பாடல்களில் தங்களுக்கு பிடித்த பாடல் என்ன எனக் கேட்கப்பட்டது. அதற்கு மூவரும் மூன்று பாடல்களை தெரிவித்தனர். வைரமுத்து உயிரே பாடலையும், மணிரத்னம் தமிழா தமிழா பாடலையும், ஏஆர்.ரஹ்மான் கண்ணாளனே பாடலையும் கூறினர். அப்போது கண்ணாளானே பாடலில், கண்ணாளனே என்ற வார்த்தைக்காக மட்டும் இரண்டு மணிநேரம் எடுத்துக்கொண்டதாக வைரமுத்து தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











