Simbu: வெறித்தனமாக ரெடியாகும் சிம்பு.. எஸ்டிஆர் 48க்கா மாப்ள.. கல்யாணத்துக்கு மாமா?

சென்னை: தனது குழந்தை பருவத்திலிருந்து திரையுலகில் இருந்து வருபவர் நடிகர் சிம்பு. பல படங்களை குழந்தை நட்சத்திரமாக தனது தந்தையுடன் நடித்து கலக்கியவர். அதனை தொடர்ந்து தனது இளம் வயதில் கதாநாயகனாக பல வெற்றி படங்களை கொடுத்தார்.

மேலும், மன்மதன், வல்லவன், குத்து, காளை, கோவில், விண்ணைத்தாண்டி வருவாயா போன்ற படங்களின் மூலம் தமிழ் திரைத்துறையில் தவிர்க்க முடியாத கதாநாயகனானார்.

Simbu chest workout video vows fans and goes trending

உடல் எடை அதிகரிப்பு: ரெட் கார்டு கொடுக்கப்பட்ட நிலையில், படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், உடல் எடை அதிகரிப்பு காரணமாக முன்னாள் இருந்தது போன்று ஒரு சுறுசுறுப்பான நடிப்பு மற்றும் நடனத்தை வெளிப்படுத்த முடியாமல் சிரமப்பட்டார் சிம்பு. தனது உடல் எடையை முற்றிலும் குறைந்து மெல்லிய தோற்றத்துடன் ஈஸ்வரன் படத்தில் மீண்டும் நடித்தார். ஆனால் அந்த படம் ஓடவில்லை. 2021-ம் ஆண்டு வெளியான மாநாடு படம் சிம்புவின் கம்பேக் படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து தொடர்ச்சியாக வெந்து தணிந்தது காடு, பத்து தல போன்ற படங்களிலும் ரொம்ப ரிஸ்க் எடுத்து நடித்தார். ஆனால், மாநாடு அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை.

குவியும் பட வாய்ப்புகள்: உடல் எடை அதிகரிப்பு, சரியாக படப்பிடிப்பு வராமல் தவிர்த்தது போன்ற காரணங்களுக்காக சிம்புவை வைத்து படம் எடுக்க இயக்குநர்கள் யோசிக்க தொடங்கிய நிலையில், தற்போது உடல் எடையை குறைத்து புதிய உற்சாகத்துடன் இருக்கும் சிம்புவுடன் படம் பண்ண நிறைய இயக்குநர்கள் தயாராக உள்ளனர்.

STR 48-க்காக வொர்க் அவுட்: சிம்புவின் 48வது படத்தை ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் கமல்ஹாசன் தயாரிக்கிறார். இப்படத்தின் இயக்குநர் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி. இப்படத்தில் தீபிகா படுகோன் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் படக்குழு தரப்பில் இருந்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.

இந்நிலையில் சிம்பு தனது 48வது படத்திற்காக செஸ்ட் வொர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது. மேலும், அவர் பெண்ணுக்கு முன்பாக அமர்ந்திருக்கும் போட்டோவும் வெளியான நிலையில், அந்த பெண்ணைத் தான் திருமணம் செய்துக் கொள்ளப் போகிறாரா? என்றும் கிசுகிசு கிளம்பி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X