நானும் பொங்கலுக்கு வரேன்- ரஜினி, அஜித்துடன் மோதும் சிம்பு: என்ன நடக்கப் போகுதோ?

By Siva

Recommended Video

பொங்கலுக்கு ரிலீஸாகும் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம்- வீடியோ

சென்னை: இந்த பொங்கல் சுவாரஸ்யமான பொங்கலாக இருக்கப் போகிறது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் தீபாவளிக்கு வரும் என்று கூறி ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்கிறார்கள். இந்த பொங்கல் தல பொங்கல் என்று அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்நிலையில் இது தல பொங்கல் மட்டும் அல்ல தலைவர் பொங்கலும் கூட என்று பேட்ட வந்துள்ளது.

அஜித்

அஜித்

பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் விஸ்வாசம் மட்டும் தான் வெளியாகும் என்று நினைத்த நிலையில் ரஜினியின் பேட்ட படத்தை வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ். பேட்ட பொங்கலுக்கு வருகிறார் பராக், பராக் என்று தற்போதே விளம்பரத்தை துவங்கிவிட்டது.

நானும் வரேன்

நானும் வரேன்

அஜித், ரஜினி படங்கள் மட்டும் அல்ல சுந்தர் சி இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் வந்தா ராஜாவாதான் வருவேன் படமும் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று கூறப்படுகிறது. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் கேத்ரீன் தெரசா, மேகா ஆகாஷ், மகத், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

படங்கள்

படங்கள்

அஜித், ரஜினி, சிம்பு படங்கள் ஒரே நேரத்தில் ரிலீஸானால் மூன்று பேருக்கும் அதிக அளவில் தியேட்டர்கள் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் மூன்று படங்களும் ஒன்றாக வெளியாவதால் வசூல் நிச்சயம் பாதிக்கப்படும். இந்த 3 பட ரிலீஸால் தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் தான் கவலை அடைவார்கள்.

பார்க்கலாம்

ஓபனிங் கிங்கான அஜித், ரஜினியுடன் சிம்பு மோதுகிறார். மூன்று படங்களில் எது அதிகம் வசூல் செய்யும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஒரு வேளை சிம்பு படம் பொங்கலுக்கு வராதோ என்று நினைக்க வேண்டாம். பொங்கலுக்கு வருகிறோம் என்று சிம்புவே தெரிவித்துவிட்டார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X