அவள் பறந்து போனாளே...: சொம்பு சொம்பாக கண்ணீர் விடும் சிம்பு
சென்னை: தங்கை இலக்கியா கணவர் வீட்டுக்கு சென்றதையடுத்து அந்த பிரிவை தாங்க முடியாமல் சிம்பு கண்ணீர் விடுகிறாராம்.
சிம்புவின் தங்கை இலக்கியாவுக்கும், சாப்ட்வேர் என்ஜினியர் அபிலாஷுக்கும் கடந்த 10ம் தேதி சென்னையில் சிறப்பாக திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அன்று மாலை நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினி, கமல், விஜய் என்று ஏராளமான திரையுலகினர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அந்த மகிழ்ச்சியை ட்விட்டரில் பகிர்ந்து கொண்ட சிம்பு தற்போது கவலையில் உள்ளாராம்.

கணவர் வீடு
திருமணம் முடிந்த பிறகு இலக்கியா தனது கணவர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இத்தனை நாட்களாக தன்னுடன் ஒரே வீட்டில் வளர்ந்த தங்கையின் பிரிவு அண்ணன் சிம்புவை வெகுவாக பாதித்துள்ளதாம்.

கண்ணீர்
தங்கை பிறந்த வீட்டை விட்டு சென்றதை நினைத்தால் சிம்புவால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியவில்லையாம். மனிதர் தங்கையை நினைத்து அழுதுவிட்டாராம்.

காதல் பிரிவை விட
தங்கை பிரிந்து சென்றது காதல் பிரிவை விட மிகவும் வேதனையாக உள்ளது என்று சிம்பு தெரிவித்துள்ளார். இந்த பிரிவை தான் எப்படி தாங்கிக் கொள்ளப் போகிறோமோ என்று வருந்துகிறாராம்.

ஹன்சிகா
சிம்புவின் காதலியான ஹன்சிகா காதலர் தினத்தை தனது தோழிகளோடு கொண்டாடியது காதலர்கள் பிரிந்து விட்டார்களோ என்ற பேச்சுக்கு இடம்கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











