'யங் சூப்பர் ஸ்டார்' பட்டம் தேவையில்லை…: நடிகர் சிம்பு 'திடீர்' முடிவு

By Mayura Akilan

சென்னை: பெயருக்கு முன்பாக போடப்படும் 'யங் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை தாம் துறப்பாகதாக, நடிகர் சிம்பு திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட செய்தியில், "தன்னையறிதல் என்ற நோக்கத்துக்காக, எனக்கு நானே சில வரையறைகளை வகுத்துக்கொள்ள, நான் ஆன்மிகப் பாதையில் ஈடுபட்டுள்ளேன்.

அதன் முதல் முயற்சியாக, ஈகோவுக்கு வழிவகுக்கும் தேவையில்லாத விஷயங்களை துறக்க முடிவு செய்துள்ளேன். அதன்படி, 'யங் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தைத் துறக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனக்கென்று ஒரு பிம்பம்

எனக்கென்று ஒரு பிம்பம்

எனது தொழிலின் முக்கியமான கட்டத்தை நான் எட்டியுள்ளதால், என்னைச் சுற்றி உருவாகியிருக்கும் பிம்பத்தைப் பற்றியும், அது என் ரசிகர்களிடம் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றியும் உணர்கிறேன்.

சமுதாய அக்கறை

சமுதாய அக்கறை

சமுதாய அக்கறையுள்ள ஒருவனாகப் பார்க்கும்போது, இத்தகையப் பட்டங்கள் வளர்ந்து வரும் ஒரு தனி நபரின் மேல் ஏற்படுத்தும் பாதிப்பையும் புரிந்து கொண்டுள்ளேன்.

பொதுமக்களிடம் பாராட்டு

பொதுமக்களிடம் பாராட்டு

பொதுமக்களிடம் நற்பெயரும், பாராட்டும் பெறுவது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டுள்ளேன். எனது இந்த முடிவு, அதற்கான முதல் படியாக அமையும் என நினைக்கிறேன். ‘

ரசிகர்கள் ஆதரவு

ரசிகர்கள் ஆதரவு

இவ்வளவு நாட்களாக என்னை ஆதரித்து வரும் என் ரசிகர்கள் எனது இந்த முடிவையும் ஆதரிப்பார்கள் என திடமாக நம்புகிறேன்" என்று நடிகர் சிம்பு கூறியுள்ளார்.

லிட்டில் சூப்பர் ஸ்டார்

லிட்டில் சூப்பர் ஸ்டார்

குழந்தை நட்சத்திரமாக அப்பா டி.ராஜேந்தர் இயக்கிய படங்களில் நடித்தபோதே, ஐ ஆம் ய லிட்டில் ஸ்டார், ஆவேன் நான் சூப்பர் ஸ்டார் -என்று பாட்டு பாடி ஆடியவர் சிலம்பரசன். அதனால் சின்ன வயதிலேயே சூப்பர் ஸ்டார் ஆக வேண்டும் என்ற ஆசை அவரது ரத்தத்தில் ஊறி விட்டது.

யங் சூப்பர் ஸ்டார்

யங் சூப்பர் ஸ்டார்

கதாநாயகன் ஆனபோது யங் சூப்பர் ஸ்டார் என்று தனக்குத்தானே பட்டத்தை சூட்டிக்கொண்டார் சிம்பு.

தனுஷ் ரசிகர்கள் போட்டி

தனுஷ் ரசிகர்கள் போட்டி

ஆனால், அவருக்குப் போட்டியாக தனுஷின் ரசிகர்கள் அவருக்கு இளைய சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை சூட்டினர்.

யார் சூப்பர் ஸ்டார்

யார் சூப்பர் ஸ்டார்

இந்த நிலையில், தற்போது அஜீத், விஜய்க்கிடையே அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்கிற போட்டி கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

பலத்த போட்டி

பலத்த போட்டி

இந்த போட்டிக்கு நடுவே நாமும் யங் சூப்பர் ஸ்டார் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் தன்னை ஆளாலுக்கு கிண்டல் செய்வார்கள் என்பதால், இப்போது யங் சூப்பர் ஸ்டார் பட்டத்தை துறக்க முடிவு செய்து விட்டாராம்.

வாலுவில் பட்டம் கட்

வாலுவில் பட்டம் கட்

அடுத்து அவர் நடிப்பில் திரைக்கு வரவுள்ள வாலு படத்தில் அஜீத், சூர்யா போன்ற நடிகர்கள் தங்களது பெயரை டைட்டிலில் போடுவது போன்று சிம்பு நடிக்கும் வாலு என்று மட்டுமே தனது பெயரை போட்டுக்கொள்ள முடிவெடுத்துள்ளாராம்.

தாமதமாக எடுத்தாலும் ரொம்ப நல்லமுடிவுதான் சிம்பு.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X