'சூப்பர் ஸ்டார்' பட்டம் விவகாரம்: சிம்புவின் அதிரடி முடிவு
சென்னை: இனி தனக்கு 'யங் சூப்பர் ஸ்டார் பட்டம்' வேண்டாம் என்று சிம்பு முடிவு செய்துள்ளார்.
சிம்பு குழந்தை நட்சத்திரமாக கோலிவுட்டுக்கு வந்தவர். தனது தந்தை டி.ராஜேந்தரின் படங்களில் குழந்தையாக நடித்து நடிப்பில் அனைவரையும் கவர்ந்தவர். அதன் பிறகு ஹீரோவாக ஆனார்.
ஹீரோவானபோது அவர் 'யங் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை தனது பெயருக்கு முன்பு வைத்துக் கொண்டார்.

ஆன்மீகம்
அண்மை காலமாக ஆன்மீக பாதையில் செல்லும் சிம்பு திடீர் என்று ஒரு முடிவு எடுத்துள்ளாராம். அதாவது இனி 'யங் சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்தை பயன்படுத்தக் கூடாது என்று.

அடுத்த சூப்பர் ஸ்டார்
ஏற்கனவே ஒரு பிரபல வாரப் பத்திரிக்கை அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற கருத்துக்கணிப்பபை நடத்தி முடிவை வெளியிட்டதில் பெரும் ரகளையாகிவிட்டது.

தளபதி
சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் எனக்கு வேண்டாம் என்று கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட விஜய்யே தெரிவித்துவிட்டார்.

எஸ்கேப்
ஒரு வேளை யங் சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை வைத்து எங்கே தனது தலையை உருட்டுவார்களோ என்ற பயத்தில் பட்டம் வேண்டாம் என்று சிம்பு சொல்வதாகவும் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











