நீங்கள் இல்லாமல் நான் இல்லை.. ட்விட்டரில் நெகிழ்ந்த சிம்பு… என்ன விஷயம் ?
சென்னை : மாநாடு திரைப்படம் திரையரங்கில் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது.
மாநாடு படத்தின் 50வது நாளை முன்னிட்டு படக்குழுவினர் ட்விட்டரில் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து வருகின்றனர்.
மாநாடு திரைப்படத்தில், சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன், பிரேம்ஜி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

சிம்புவின் மாநாடு
மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி சிம்புவின் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியானது. கடந்த சில வருடங்களாக சிம்புவின் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவிய நிலையில் மாநாடு திரைப்படம் சிம்புவுக்கு ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக அமைந்தது.

டைம் லூப்
மாநாடு திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி பல காட்சியில் கை தட்டலை பெற்றார். நாம் எத்தனையோ டைம் ட்ராவல் திரைப்படங்களை பார்த்து இருக்கிறோம். ஆனால், மாநாடு திரைப்படத்தை டைம் லூப் முறையில் எடுத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் இயக்குனர் வெங்கட்பிரபு.

மிரட்டலான நடிப்பு
இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்திருந்தார். வில்லனாக எஸ்.ஜே. சூர்யா மிரட்டி இருந்தார். இவர் எப்படிப்பா... இப்படி நடிக்கிறார் என்று அனைவரும் மெச்சும் அளவுக்கு ஸ்கோர் செய்துவிட்டார் எஸ்.ஜே. சூர்யா.

திரையரங்கில்
மாநாடு திரைப்படம் நவம்பர் 25ந் தேதி திரையரங்கில் வெளியாகி அரங்கு முழுவதும் நிரம்பியே காணப்பட்டது. கொரோனா தீவிரத்தால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் மாநாடு திரைப்படம் இன்னும் திரையரங்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

சிம்பு ட்வீட்
இந்நிலையில் மாநாடு திரைப்படம் வெளியாகி 50 நாட்களை கடந்துள்ளது. இதனை கொண்டாடும் வகையில் படக்குழவினர் ட்விட்டரில் மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர். சிம்பு தனது ட்விட்டரில், "நன்றி அனைவருக்கும் நன்றி" நீங்கள் இல்லாமல் நான் இல்லை என பதிவிட்டுள்ளார்.

அனைவருக்கும் நன்றி
அதே போல இயக்குனர் வெங்கட் பிரபு, அனைத்து ஊடக நண்பர்கள் மற்றும் சினிமா காதலர்கள் மற்றும் சிலம்பரசனின் ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். சிம்புவுக்கு கம்பேக்காக அமைந்த இந்த படத்தை சிம்புவின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











