இப்படி எல்லாம் பண்ணாதீங்க, கஷ்டமாக இருக்கு: வைரலான சிம்பு வீடியோ
சென்னை: இப்படி எல்லாம் பண்ணாதீங்க கஷ்டமாக இருக்கு என்று சிம்பு தனது ரசிகரிடம் கூறிய வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.
சிம்புவின் தீவிர ரசிகர் ஒருவரை அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அவர் சிம்புவின் மீது கொண்ட அதிக அன்பால் தனது கையில் சிம்புவின் பெயரை பச்சை குத்தியுள்ளார்.
இதை அந்த ரசிகர் சிம்புவிடம் காண்பித்தார்.

ரசிகர்
ரசிகரின் கையில் தனது பெயர் பச்சை குத்தப்பட்டிருப்பதை பார்த்த சிம்பு இப்படி எல்லாம் பண்ணாதீங்க கஷ்டமாக இருக்கு. உங்க அன்பு மட்டும் போதும் என்றார்.
வைரல்
சிம்பு தனது ரசிகரை சந்தித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அன்பு மட்டும் போதும், இது தான்டா எங்க தலைவன் எஸ்டிஆர் என்று சிம்பு ரசிகர்கள் பெருமையாக கூறி வருகிறார்கள்.
முத்தம்
சிம்புவை சந்தித்த அந்த தீவிர ரசிகர் அவரை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். அந்த புகைப்படங்களையும் சிம்பு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

படம்
சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக விஜய் சேதுபதி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











