அந்த 2 பேருக்கு டாட்டா காட்டிட்டாரா சிம்பு?.. கடைசியில் வந்து பார்க்கிங் பண்ணிட்டாரே இயக்குநர்!

சென்னை: நடிகர் சிம்புவின் 42வது பிறந்தநாள் வரும் பிப்ரவரி 3ம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சிம்பு நடிப்பில் எந்தவொரு படமும் வெளியாகாத நிலையில், இந்த ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் உடன் இணைந்து நடித்துள்ள தக் லைஃப் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது. ஆனால், சிம்பு சோலோவாக நடிக்கும் படம் எப்போதுதான் ஆரம்பமாகும் என ரசிகர்கள் நீண்ட காலமாக காத்திருக்கின்றனர்.

கடைசியாக 2021ம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் தான் பல ஆண்டுகள் கழித்து அவருக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதற்கு முன்னதாக விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என கெளதம் மேனன் படங்கள் தான் கைகொடுத்தன.

simbu simbu birthday

மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு உடல் எடையை ரொம்பவே குறைத்துக் கொண்டு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. பத்து தல படமும் பந்தயம் அடிக்கவில்லை.

தேசிங் பெரியசாமி படம் என்ன ஆச்சு?: கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு நடிக்கும் படத்தை கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமி பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப் போவதாக போஸ்டர் அறிவிப்பு மட்டுமே வெளியானது. ஆனால், இதுவரை அந்த படம் ஆரம்பிக்கவே இல்லை. கமல்ஹாசன் தயாரிக்கவில்லை என்றும் சிம்புவே தயாரிக்கப் போகிறார் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும் அந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அஸ்வத் மாரிமுத்துவுக்கும் அல்வாவா?: திடீரென சிம்பு இன்னமும் கோலிவுட்டில் ஆக்டிவாக உள்ளார் என்பதை நிரூபிக்கும் விதமாக பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கியுள்ள அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், தற்போது அவரையும் வெயிட்டிங் லிஸ்ட்டில் தான் சிம்பு வைத்திருக்கிறார் என்கின்றனர்.

simbu simbu birthday

பார்க்கிங் பட இயக்குநருக்கு ஜாக்பாட்: தனது பிறந்தநாளில் புதிய படத்தின் தொடக்கத்தை சிம்பு அறிவிக்கப் போவதாக கூறுகின்றனர். ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்ற பார்க்கிங் படத்தை இயக்கிய ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் தான் சிம்பு நடிக்கப் போகிறார் என்றும் அந்த படம் முடிந்த பின்னர் தான் அஸ்வத் மாரிமுத்து மற்றும் தேசிங் பெரியசாமி படத்தை சிம்பு ஆரம்பிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கண்டிப்பாக சிம்புவின் பிறந்தநாள் அதுவுமாக அவரது ரசிகர்களுக்கு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் அப்டேட் வெளியாகும் என தெரிகிறது. சிம்பு ரசிகர்கள் இந்த ஆண்டு தக் லைஃப் படத்தை தியேட்டரில் கொண்டாட ரெடியாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X