»   »  #சக்கைபோடுபோடு ராஜா: தீயாக இல்லை ஓவர் தீயாக வேலை பார்த்த சிம்பு

#சக்கைபோடுபோடு ராஜா: தீயாக இல்லை ஓவர் தீயாக வேலை பார்த்த சிம்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சந்தானத்தின் சக்கை போடு போடு ராஜா படத்திற்கு இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார் சிம்பு.

இத்தனை நாட்களாக நடிகர், இயக்குனராக இருந்து வந்த சிம்புவை இசையமைப்பாளர் ஆக்கிப் பார்த்துள்ளார் நடிகர் சந்தானம். சந்தானத்தின் சக்கை போடு போடு ராஜா படத்திற்கு சிம்பு தான் இசை.


Simbu finishes composing music for #SakkaPoduPoduRaja

சந்தானம் படத்திற்கு இசையமைப்பதாக சிம்பு கடந்த மாதம் 17ம் தேதி தான் அறிவிப்பு வெளியிட்டார். அதற்குள் அவர் படத்தில் வரும் அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணியை முடித்துவிட்டார்.


இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,#சக்கைபோடுபோடு ராஜா படத்தின் அனைத்து பாடல்களுக்கும் இசையமைக்கும் பணி முடிந்தது. ரெக்கார்டிங் முழுவீச்சில் நடந்து வருகிறது. உங்களுக்கு பாடல்களை வெளியிட காத்துள்ளேன் என தெரிவித்துள்ளேன்.


English summary
Musician Simbu tweeted that, '#SakkaPoduPoduRaja all songs composing over .Recording session in full swing . Can't wait for u guys to listen.'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil