கெளதம் மேனனுக்கும் சிம்புவுக்கும் பிரச்னையா?.. யாருப்பா சொன்னது.. என்னம்மா பேசிட்டாரு பாருங்க!
சென்னை: சிம்பு இப்போது தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். ஜூன் ஐந்தாம் தேதி படம் வெளியாகவிருக்கிறது. இந்தப் படம் தவிர்த்து எஸ்டிஆர் 49, தேசிங்கு பெரியசாமியுடன் ஒரு படம், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம் என பிஸியாக இருக்கும் அவர்; வின்டேஜ் சிம்புவாக காட்சியளித்துக்கொண்டிருக்கிறார். இந்தச் சூழலில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சிம்பு பேசியிருப்பது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது.
எஸ்டிஆர், Atman என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் சிம்பு. இடையில் அவருக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளால் சினிமாவில் முழுவதுமாக கவனம் செலுத்த முடியாமல் இருந்தார். அதனையடுத்து உடல் எடையை குறைத்து, எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி மீண்டும் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக நடித்த மாநாடு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. வெந்து தணிந்தது காடு படம் நல்ல வரவேற்பையும், பத்து தல படம் சுமாரான வரவேற்பையும் பெற்றது.

கமலுடன் முதன்முறையாக: தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசனுடன் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் கம்ல், சிம்புவுடன் திரிஷா, அபிராமி, ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் உள்ளிட்டோரும் நடித்திருக்கிறார்கள். ஜூன் ஐந்தாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. முதன்முறையாக கமலுடன் இணைந்திருக்கிறார் எஸ்டிஆர். படத்தின் முதல் சிங்கிளான ஜிங்குச்சா பாடலில் கமலும், சிம்புவும் சேர்ந்து ஆடிய நடனம் பலரிடமும் அப்ளாஸை வாங்கியிருக்கிறது. எனவே முழு படத்தில் அவர்கள் எப்படி நடித்திருப்பார்கள் என்பதை பார்ப்பதற்கான ஆவலும் ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.
சிம்புவின் அடுத்தடுத்த படங்கள்: இதனையடுத்து அவர் பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் நடிக்கிறார். இதன் பூஜை சமீபத்தில்தான் நடந்தது. அவருக்கு ஜோடியாக டிராகன் புகழ் கயாடு லோஹர் நடிக்கிறார். மேலும் சந்தானமும் நீண்ட காலத்துக்கு பிறகு காமெடி ரோலை ஏற்றிருக்கிறார். சந்தானத்தை சிம்புதான் சினிமாவில் அறிமுகப்படுத்தினார். எனவே சிம்புவுக்காக தனது ஹீரோ பயணத்திலிருந்து கொஞ்சம் விலகி இந்தப் படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வின்டேஜ் சிம்பு: எஸ்டிஆர் 49 படத்துக்கு பிறகு அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படமும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படமும் கமிட்டாகியிருக்கிறார். இவற்றில் தேசிங்குவுடனான படத்தை முதலில் கமல்தான் தயாரிக்கவிருந்தார். சில காரணங்களால் அவர் விலகியதைத் தொடர்ந்து சிம்புவே அந்தப் படத்தை தயாரிக்கிறார் என்பதும்; ஹை பட்ஜெட்டில் இந்தப் படத்தை உருவாக்கவிருப்பதும் கவனிக்கத்தக்கது. நிச்சயம் இந்தப் படம் சிம்புவின் கரியரில் முக்கியமானதாக இருக்கும் என்பது சிம்பு ரசிகர்களின் நம்பிக்கை.
சிம்புவின் பேச்சு: இந்நிலையில் சந்தானம் ஹீரோவாக நடித்திருக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய சிம்பு, "இந்தப் படத்தின் ட்ரெய்லரை பார்த்தேன். காமெடி எல்லாம் சூப்பராக இருந்தன. மொட்டை ராஜேந்தர் அண்ணன் எல்லாம் கலக்கியிருக்கிறார். ஆனால் ஒன்று மட்டும்தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எங்கள் டைரக்டர் கௌதம் மேனனை இப்படி செய்துவிட்டீர்களே. கண்டிப்பாக இதுக்கு மட்டும் நான் சும்மா விடமாட்டேன்" என்று கலகலப்பாக பேசினார்.
என்ன நடந்தது?: டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ட்ரெய்லரில், கௌதம் மேனனை வைத்து உயிரின் உயிரே பாடலை ரீ க்ரியேட் செய்திருந்தார்கள். அது ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இதனை குறிப்பிட்டுதான் சிம்பு அப்படி பேசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











