அஜீத் படத்துக்கு முன்.... தொடங்கியது சிம்பு - கவுதம் மேனன் புதிய படம்!

By Shankar

நாம் ஏற்கெனவே சொன்னதுபோல.. கவுதம் மேனன்- சிம்பு கூட்டணியின் புதிய படம் எந்த ஆர்ப்பாட்ட அறிவிப்பும் இல்லாமல் தொடங்கிவிட்டது.

கவுதம் மேனன் இயக்கத்தில் விஜய் மற்றும் சூர்யா படங்கள் பிரமாண்டமாக அறிவிக்கப்பட்டு, அதே வேகத்தில் கைவிடப்பட்டன.

இதனால் கவுதம் மேனன் கடும் நெருக்கடிக்கு உள்ளானார்.

கைகொடுத்த அஜீத்...

கைகொடுத்த அஜீத்...

இந்த நேரத்தில் தானாக கவுதம் மேனனை அழைத்து கை கொடுத்தார் அஜீத். ஒருவகையில், கவுதம் மேனன் படங்கள் அறிவிக்கப்பட்டு கைவிடப்படும் நிலைக்கு முதல் காரணம் அஜீத்தான். மூன்று ஆண்டுகளுக்கு முன் கவுதம் மேனன் - அஜீத் படம் ஒன்று அறிவிக்கப்பட்டு நின்றுபோனது நினைவிருக்கலாம்.

ஏ எம் ரத்னம்

ஏ எம் ரத்னம்

அதை மனதில் வைத்தோ என்னமோ, இந்த முறை கவுதம் மேனனுக்கு உறுதியாக கால்ஷீட் கொடுத்துள்ளார் அஜீத். இந்தப் படத்தைத் தயாரிப்பவர் ஏ எம் ரத்னம்.

அஜீத்துக்கு முன்...

அஜீத்துக்கு முன்...

அஜீத் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பிரமாண்ட படம். இன்னொன்று, அதற்கு முன் அஜீத் வீரம் படத்தை முடித்தாக வேண்டும். வீரம் முடிந்த பிறகு காலில் அவருக்கு அறுவைச் சிகிச்சை நடக்கவிருக்கிறது. அதன் பிறகு 3 மாதங்கள் ஓய்விலிருப்பார் அஜீத். இந்த இடைப்பட்ட நேரத்தில் ஒரு குறுகிய கால படத்தைச் செய்கிறார் கவுதம் மேனன்.

வந்தார் சிம்பு

வந்தார் சிம்பு

இந்தப் படத்தில் நடிக்க தானாக முன்வந்து கால்ஷீட் தந்துள்ளார் சிம்பு. இந்தப் படம் சிம்பு - த்ரிஷா நடித்த விண்ணைத் தாண்டி வருவாயாவின் தொடர்ச்சி என்று வெளியான செய்திகளை மறுத்துள்ள கவுதம் மேனன், இது புத்தம் புதிய ரொமான்டிக் படம் என்று தெரிவித்துள்ளார்.

அடையாறில் ஷூட்டிங்

அடையாறில் ஷூட்டிங்

இந்தப் படத்தின் ஷூட்டிங் சசத்தமில்லாமல் சென்னை அடையாறில் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் இங்கு படமாக்கப்பட்ட பிறகு, வெளியூர் செல்கிறது யூனிட்.

மும்பை புதுமுகம்

மும்பை புதுமுகம்

கதாநாயகியாக சமந்தா நடிப்பார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் இப்போது மும்பை புதுமுகத்தை தேர்வு செய்துள்ளாராம் கவுதம் மேனன்.

ஏஆர் ரஹ்மான்

ஏஆர் ரஹ்மான்

இந்தப் படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைப்பார் என்று தெரியவந்துள்ளது. மார்க் கோனிக்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். கவுதம் மேனனின் போட்டோன் கதாஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X