சிம்பு, கௌதம் மேனன் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் பெயர் திடீர் மாற்றம்!

சென்னை : எத்தனை முறை பார்த்தாலும் அலுத்துப் போகாத காதல் படங்களுக்கு பெயர் போனவர் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கும் அதே சமயம் நடிகராகவும் படங்களில் கலக்கி வருகிறார்.

சிம்புவுடன் முறையாக விண்ணைத்தாண்டி வருவாயா என்ற படத்தை இயக்கி இருந்த கௌதம் வாசுதேவ் மேனன் அதன்பிறகு அச்சம் என்பது மடமையடா என்ற படத்தை இயக்கி அதிலும் வெற்றி கண்டார்.

இப்பொழுது மூன்றாவது முறையாக சிம்பு,கௌதம் மேனன் கூட்டணியில் இணைய இருக்க அதற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென படத்தின் டைட்டிலை மாற்றி புதிய டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கேங்ஸ்டர் டானாக

கேங்ஸ்டர் டானாக

ஈஸ்வரன் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு சிம்பு அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி குறித்த நேரத்தில் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்க கைவசம் இப்போது மாநாடு மற்றும் பத்து தல ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதில் மாநாடு திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். ஹீரோ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான கல்யாணி பிரியதர்ஷன் இதில் ஹீரோயினாக நடிக்கிறார் மற்றும் எஸ் ஜே சூர்யா வில்லனாக வருகிறார். காதல் மற்றும் கமர்சியல் படங்களில் மட்டும் நடித்து வந்த சிம்பு தன்னால் கேங்க்ஸ்டர் படங்களிலும் நடிக்க முடியும் என பத்து தல படத்தில் கேங்ஸ்டர் டானாக நடித்து மாஸ் காட்டி வருகிறார். இந்த படத்தை சில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் கிருஷ்ணா இயக்கி வருகிறார். கன்னடத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மஃப்டி திரைப் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

கௌதம் மேனன் கூட்டணி

கௌதம் மேனன் கூட்டணி

அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிக்கவும் சிம்பு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு வரும் நிலையில் கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக இணைய இருப்பது உறுதியாகி உள்ளது. சிம்பு மற்றும் கௌதம் மேனன் கூட்டணி தமிழ் ரசிகர்களுக்கு ஒரு லவ் ட்ரீட் என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு இவர்களது கூட்டணியில் வெளியாகும் காதல் திரைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அந்த வகையில் இவர்கள் முதல் முறையாக இணைந்து விண்ணைத்தாண்டி வருவாயா சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. இன்றுவரை இப்படம் தமிழ் ரசிகர்களுக்கு ஃபேவரிட் படங்களில் ஒன்றாக உள்ளது. இதில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை திரிஷா ஒரு வயது மூத்த பெண்ணாக நடித்து அனைவரையும் வெகுவாக கவர்ந்து இருப்பார்.

மூன்றாவது முறையாக

மூன்றாவது முறையாக


விண்ணைத்தாண்டி வருவாயா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டடித்தது. இந்நிலையில் கௌதம் மேனன், சிம்பு கூட்டணியின் இரண்டாவது முறையாக அச்சம் என்பது மடமையடா என்ற படத்தில் இணைந்து இந்த முறையும் படம் வேற லெவல் ஹிட்டடித்தது.
விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா என இரண்டு வெற்றிகளை சிம்புவுக்கு கொடுத்த கௌதம் மேனன் இப்போது மூன்றாவது முறையாக இணைய இருப்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் அந்த படத்திற்கு "நதிகளிலே நீராடும் சூரியன்" என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் வித்தியாசமான டைட்டில்களையும் பழைய பாடல்களின் வரிகளில் டைட்டில்களை வைக்கக் கூடிய கௌதம் மேனன் இந்த படத்திற்கு "நதிகளிலே நீராடும் சூரியன்" என வைத்து இருந்தது அனைவரையும் யோசிக்க வைத்திருந்தது.

Recommended Video

STR என்ன பாலா பட HEROவா மாறிட்டாரு! அடையாளமே தெரியலயே Simbu | Oneindia Tamil
கவரும் பெயர்கள்

கவரும் பெயர்கள்

கௌதம் மேனன் படங்கள் என்றாலே படத்தின் பெயரை கேட்டாலே எப்போதும் ரசிகர்களை சுண்டி இழுக்கும் தமிழ் வார்த்தைகளிலேயே இருக்கும் ,மின்னலே படத்தில் தொடங்கி ,காக்க காக்க ,வேட்டையாடு விளையாடு ,பச்சைக்கிளி முத்துச்சரம்,வாரணம் ஆயிரம் ,விண்ணைதாண்டி வருவாயா ,என்னை அறிந்தால் ,அச்சம் என்பது மடமையடா ,போன்ற தலைப்புகள் மட்டும் அல்லாமல் தற்போது இவரது இயக்கத்தில் உருவாகி வரும் படங்களின் பெயர்களும் அவ்வாறே இருக்கும் ஜோஷுவா இமை போல் காக்க ,துருவ நட்சத்திரம் ,நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்களின் வேலைகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டு இருக்கின்றன.

 டைட்டிலில் மாற்றம்

டைட்டிலில் மாற்றம்

விரைவில் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தின் படப்பிடிப்பை தொடங்க இருந்த படக்குழு இப்பொழுது திடீரென டைட்டிலில் மாற்றம் செய்துள்ளோம் என்ற அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நடிகர் சிம்பு வெளியிட்டுள்ள புதிய போஸ்டரில் ஆகஸ்ட் 6 ஆம் தேதியான இன்று மதியம் 12.15 மணிக்கு 47வது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் புதிய டைட்டிலுடன் வெளியாகிறது என அறிவித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கௌதம் மேனன் இயக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் ஐசரி கே கணேஷ் இப்படத்தை தயாரிக்கிறார். சிம்பு மற்றும் கௌதம் மேனனின் இந்த திடீர் முடிவைக் கண்டு ரசிகர்கள் அதிர்ந்து போய் இருக்க எல்லாமே நன்மைக்கே என புதிய டைட்டிலையும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரையும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X