ஆமா... நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன்!- உறவை உறுதிப்படுத்திய சிம்பு
சென்னை: சினிமாக்காரர்கள் ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப மறுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்றால், அது உண்மையாகப் போகிறது என்று அர்த்தம்.
சில தினங்களுக்கு முன்பு தனக்கும் சிம்புவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாங்க சும்மா ப்ரண்ட்ஸ் மட்டும்தான் என கரகாட்டக்காரன் கோவை சரளா செந்திலைப் பார்த்து கவுண்டரிடம் சொல்வது போல ஸ்டேட்மெண்ட் விட்டிருந்தார் ஹன்சிகா.

ஆமா... அவரை நான் விரும்பறேன்...
இப்போது தலைகீழ். இன்று சனிக்கிழமை தனது ட்விட்டர் பக்கத்தில் சிம்புவுக்கும் தனக்கும் உள்ள உறவை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். 'ஆமா, சிம்புவை நான் விரும்புகிறேன். ஆனால் அதெல்லாம் பர்சனல் விஷயம். யாருடனும் விவாதிக்க முடியாது,' என்று கூறியிள்ளார்.

சிம்புவும் உறுதிப்படுத்தினார்...
ஹன்சிகா சொன்னதை உறுதிப்படுத்தி சிம்புவும் ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில் "ஆமா... நான் இப்போ ஹன்சிகா கூடத்தான் இருக்கேன். அவர் ரொம்ப நல்ல பொண்ணு. திருமணம் பற்றி விரைவில் வீட்டில் முடிவு செய்வார்கள். எங்கள் பிரைவசிக்கு மரியாதை கொடுங்க," என்று குறிப்பிட்டுள்ளார்.

50 நிமிஷத்தில்...
இன்று காலை 6.07-க்கு ஹன்சிகாதான் முதலில் ட்விட் செய்துள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அதை உறுதி செய்து சிம்பு ட்விட் செய்துள்ளார். அதாவது இருவரும் ஒன்றாகத் தங்கியிருப்பதை இப்படி தெரியப்படுத்தியுள்ளனர்.
'அப்டியா... அது ஃபேக் ஐடியாச்சே'ன்னு சொல்லாமலிருந்தா சரி!
இந்தாங்க எவிடென்ஸ்
எதுக்கும் இந்த எவிடன்ஸை போட்டு வைப்போம். இதுதான் சிம்புவின் ட்வீட்.


Click it and Unblock the Notifications











