ரூ. 3 கோடிக்கு கார் வாங்கும் சிம்பு: வைரல் புகைப்படங்கள்
Recommended Video

சென்னை: சிம்பு ரூ. 3.12 கோடிக்கு பென்ட்லி காரை வாங்குகிறாராம்.
கோலிவுட்டின் பிசியான நடிகர்களில் ஒருவராகிவிட்டார் சிம்பு. செக்கச் சிவந்த வானம் படத்தில் அவரின் நடிப்பு அனைவருக்கும் பிடித்திருந்தது. அதை அடுத்து அவர் நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது.
அஜித், ரஜினி ஆகிய இரண்டு சீனியர்களுடன் மோதுகிறார் சிம்பு.

சிம்பு
ரூ. 3.12 கோடி மதிப்புள்ள பென்ட்லி கான்டினென்டல் ஜிடி காரை புக் செய்துள்ளாராம் சிம்பு. அந்த காரை அவர் ஓட்டிப் பார்த்தபோது எடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ளது.

கவுரவத் தோற்றம்
ராதாமோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்த காற்றின் மொழி படம் இன்று ரிலீஸாகியுள்ளது. அந்த படத்தில் ஒரேயொரு காட்சியில் வந்து ரசிகர்களின் கைதட்டலை பெற்றுள்ளார் சிம்பு. தனக்கு பிடித்த நடிகையான ஜோதிகாவுக்காக மட்டுமே இந்த படத்தில் நடித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வசூல்
இந்த பொங்கல் தல, தலைவர் பொங்கல் மட்டும் அல்ல எஸ்.டி.ஆர். பொங்கலும் கூட. பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானால் எங்கள் அண்ணன் சிம்புவின் படம் ரிலீஸாகக் கூடாதா என்று சிம்பு ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்த பொங்கல் கோதாவில் ஆர்.ஜே. பாலாஜியும் குதித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

படங்கள்
சிம்பு தற்போது கை நிறைய படங்கள் வைத்துள்ளார். படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வந்துவிடுகிறார். இயக்குனர் சொல்வது போன்று நடித்துக் கொடுக்கிறார். அஅஅ-வுக்கு பிறகு அவரின் கெரியர் பிக்கப்பாகிவிட்டது என்றே கூற வேண்டும்.


Click it and Unblock the Notifications











