வாவ், நம்ம சிம்புவா இது: அநியாயத்திற்கு மாறிவிட்டாரே!!!
Recommended Video
சென்னை: குறளரசன் திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் சிம்புவை பார்த்து தான் வியந்துவிட்டனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு மாநாடு படத்தில் நடிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்திற்காக தனது உடல் எடையை குறைக்க லண்டனுக்கு சென்றார் அவர்.

ஆமாம், லண்டனுக்கு போனால் மட்டும் வெயிட் குறைந்துவிடுமா என்று சிலர் கிண்டல் செய்தனர். இந்நிலையில் சிம்பு தனது தம்பி குறளரசனின் திருமணத்தில் கலந்து கொள்ள நாடு திரும்பியுள்ளார்.
திருமண நிகழ்ச்சிக்கு சிம்பு வடநாட்டு ஸ்டைலில் உடை அணிந்திருந்தார். திருமணத்திற்கு வந்தவர்கள் அனைவரும் மாப்பிள்ளை, பெண்ணை விட்டுவிட்டு சிம்புவை தான் பார்த்தார்கள்.
காரணம் சிம்பு ஸ்லிம்மாகிவிட்டார். பழைய பன்னீர்செல்வமாக திரும்பி வந்துள்ளார். தொப்பை இருந்த இடமே தெரியவில்லை. வந்தா ராஜாவாதான் வருவேன்னு லண்டனுக்கு சென்றது வீண் போகவில்லை.
இப்போதான் பழைய சிம்புவை பார்த்த மாதிரி உள்ளது என்று ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











