இப்படித்தான் மனைவி இருக்க வேண்டும்.. சிம்பு வைத்திருக்கும் கண்டிஷன்கள் என்ன தெரியுமா?
சென்னை: நடிகர் சிம்பு தற்போது தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். இதனை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் சிம்பு தரமான கம்பேக் கொடுத்திருப்பதால் இந்தப் படத்தின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பு இருக்கிறது. இந்தச் சூழலில் நடிகர் விடிவி கணேஷிடம் தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று சிம்பு பேசியது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
எஸ்டிஆர் என ரசிகர்களால் அழைக்கப்படும் சிம்பு சில காரணங்களால் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். பிறகு உடல் எடையை குறைத்து எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்தார். ஆனால் படம் சரியாக போகவில்லை. அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மெகா ப்ளாக்பஸ்டர் ஆனது. சிம்புவின் நடிப்பும், வெங்கட் பிரபுவின் மேக்கிங்கும் ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப்போக படமானது நூறு கோடி ரூபாய் வசூலித்து கெத்து காட்டியது.

அடுத்தடுத்த ஹிட்: மாநாடு வெற்றிக்கு பிறகு சிம்பு வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் நடித்தார். இவற்றில் வெந்து தணிந்தது காடு படம் சூப்பர் ஹிட்டானது. அதில் சிம்புவின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அடுத்து நடித்த பத்து தல திரைப்படம் சரியாக போகவில்லை. சூழல் இப்படி இருக்க கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிலம்பரசன்.
எஸ்டிஆர் 48: இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கம் என்பதால் கண்டிப்பாக இந்தப் படம் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எஸ்டிஆர் ரசிகர்களிடம் இருக்கிறது. இப்படத்துக்காக சிம்பு செம ஃபிட்னெஸ்ஸோடு இருக்கிறார். அதுமட்டுமின்றி மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளையும் அவர் கற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதற்காக அவர் தாய்லாந்து, லண்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
தக் லைஃப்: இதற்கிடையே கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார் சிம்பு. ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல் ஹாசனுடன் இருக்கும் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி ட்ரெண்டானது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அட சிம்பு வேற லெவலில் இருக்கிறாரே என்று கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர். இருந்தாலும் எஸ்டிஆர் 48 படத்தின் அப்டேட் குறித்துதான் அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கின்றனர்.
நோ திருமணம்: நடிப்பில் படு பிஸியாக சிம்புவுக்கு எப்போது திருமணம் என்பதுதான் பலரது கேள்வி. அதுகுறித்து கேட்கும்போதெல்லாம் அவர் ஏதோ ஒரு பதிலை சொல்லி எஸ்கேப் ஆகிவிடுவார். அதேசமயம், சிம்புவுக்கு விரைவில் கல்யாணம் நடக்கப்போகிறது என்று மாதத்துக்கு ஒருமுறை தகவல் வெளியாகும். ஆனால் அது எதிலும் உண்மை இருக்காது. இந்தச் சூழலில் விடிவி கணேஷிடம் தனது மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சிம்பு பேசியிருக்கும் விஷயம் ட்ரெண்டாகியுள்ளது.
சிம்பு பேட்டி: விடிவி கணேஷிடம் பேசுகையில், "எனக்கு காஃபி போட்டுக்கொடுக்கவோ, சமைத்து கொடுக்கவோ பெண் தேவையில்லை. அதற்குதான் வேலையாட்கள் இருக்கிறார்களே. என்னை பொறுத்தவரை எனக்கு டாமினேட் செய்யும் பெண் தேவை. அந்தப் பெண்ணின் பேச்சை கேட்டு நான் நடக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அப்படிப்பட்ட பெண் எனக்கு மனைவியாக வர வேண்டும்" என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இப்போது ட்ரெண்டாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











