Vishal - விஷாலுக்கு தொடரும் உடல்நல பிரச்னை?.. உதவி செய்ய இறங்கியிருக்கிறாரா சிம்பு?

சென்னை: விஷால் தமிழில் பல வருடங்களாக நடித்துவருகிறார். அவரது நடிப்பில் கடைசியாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. மேலும் விஷாலின் சினிமா கரியரிலேயே இந்தப் படம்தான் நூறு கோடி ரூபாயை வசூலித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அவர் ஹரியின் இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்துவருகிறார்.

செல்லமே படத்தின் மூலம் அறிமுகமான விஷால் கடந்த பல வருடங்களாகவே ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தார். இப்படிப்பட்ட சூழலில் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் கடைசியாக நடித்தார். டைம் ட்ராவல் ஜானரில் படம் உருவாகியிருந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், ரிது வர்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்

 Simbu Helps to Vishal for his Health Issue Here are the full details

செம ரெஸ்பான்ஸ்: தமிழ் சினிமாவில் டைம் ட்ராவல் ஜானரில் வரும் படங்களுக்கு எப்போதுமே வரவேற்பு இருக்கும். அந்த ஜானரில் படம் வெளியானதால் எதிர்பார்ப்போடு படத்துக்கு சென்றனர் ரசிகர்கள். படத்தை பார்த்த ரசிகர்கள் தாங்கள் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே படம் திருப்திப்படுத்திவிட்டதாக கூறினர். குறிப்பாக ஆதிக் ரவிச்சந்திரனை ஏகத்துக்கும் கொண்டாடினர்

எஸ்.ஜே.சூர்யா: படத்தின் ஹைலைட்டாக இருந்தது நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யாதான். வயதான எஸ்.ஜே.சூர்யாவாகவும், இள வயது எஸ்.ஜே.சூர்யாவாகவும் தனது நடிப்பில் வேரியேஷன் காண்பித்து அசத்தியிருக்கிறார் படத்தில். முக்கியமாக இரண்டு எஸ்.ஜே.சூர்யாக்களும் ஃபோனில் பேசிக்கொள்ளும் காட்சியிலும், சில்க் ஸ்மிதா காட்சியிலும் சூர்யாவின் நடிப்பு பட்டாசு ரகம். அவர் வரும் ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்கள் கைத்தட்டி என்ஜாய் செய்தனர். படம் கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த படம்: இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து விஷால் உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார். அந்த சூட்டோடு ஹரி இயக்கத்தில் ரத்னம் என்ற படத்தில் நடித்துவருகிறார். ஏற்கனவே ஹரி இயக்கத்தில் இவர் நடித்திருந்த தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றவை. எனவே மார்க் ஆண்டனி கொடுத்த ஹிட் வைபை இந்தப் படத்திலும் விஷால் தொடர்வார் என்று நம்பப்படுகிறது.

நோ திருமணம்: விஷாலுக்கு 40 வயது நெருங்கிவிட்டது. ஆனாலும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கிறார். இடையில் ஒரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் அவருக்கு நடந்தது. ஆனால் அது திருமணம்வரை செல்லவில்லை. மேலும் நடிகர் சங்கத்துக்கு கட்டடம் கட்டிய பிறகுதான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் அவர் கூறியிருக்கிறார். நிலைமை இப்படி இருக்க அவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று புதிய தகவல் தற்போது வெளியாகியிருக்கிறது.

உடல்நல பிரச்னை?: அதன்படி விஷாலுக்கு உடலில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது முதுகு வலி, கண்ணில் பிரச்னை, ஒற்றை தலைவலி என ஏகப்பட்ட பிரச்னைகள் அவரை ஆட்டிப்படைப்பதாகவும் இதன் காரணமாகத்தான் அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் உடல்நல பிரச்னையை சரி செய்ய சிம்புவிடம் ஐடியா கேட்டிருக்கிறாராம் விஷால். ஏனெனில் சிம்பு தனது உடலில் சில பிரச்னைகளை சந்தித்தபோது கேரளாவில் ஆயுர்வேத மருத்துவத்தை நாடி அதன் மூலம் சரி செய்ததாக கூறப்படுகிறது.

எனவே சிம்பு சென்று மருத்துவம் பார்த்த இடத்தில் தானும் பார்க்க முடிவு செய்து; அதை சிம்புவிடம் கூற; அதன் வழிமுறைகள், எத்தனை நாள் சிகிச்சை எடுக்க வேண்டும் என்பது குறித்து பல விஷயங்களை கூறி உதவியிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் விரைவில் விஷால் கேரளாவுக்கு சென்று ஒருமாதம் அந்த சிகிச்சையை எடுக்கவிருப்பதாகவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X