என்னது சிம்பு வாங்கும் சம்பளம் இவ்வளவா?.. அடேங்கப்பா என வாயை பிளக்கும் திரையுலகம்
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கியிருக்கிறார். அதன்படி அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது; அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. இதனையடுத்து மீண்டும் பிஸியாக நடிக்க ஆரம்பித்திருக்கும் அவர் வரிசையாக படங்களில் கமிட்டாகிவருகிறார். இந்தச் சூழலில் அவரது சம்பளம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
சிம்பு இதுவரை 47 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார் அவர். இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக வழியில் சென்ற அவர் சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதேசமயம் அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்தவகையில் அவர் வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் அவர் ரொம்பவே பருமனாக காணப்பட்டார்.

மாநாடு தந்த கம்பேக்: அதனைப் பார்த்து ஒருதரப்பினர் கிண்டலும் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் சிம்புவின் எனர்ஜியை பார்த்த ரசிகர்கள், அட நம்ம எஸ்டிஆர் பழையபடி வந்துட்டாரே என்று உற்சாகத்தோடு கூறினார்கள்.
எஸ்டிஆர் 48: அடுத்ததாக அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்தார். அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சிம்புவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. படத்தின் அறிவிப்பு வந்தாலும் ஷூட்டிங் இன்னும் தொடங்கியபாடில்லை. படத்துக்கு பெரிய பட்ஜெட் தேவைப்படுவதாகவும் அதன் காரணமாகத்தான் இந்த தாமதம் என்றும் திரைத்துறையிலிருந்து தகவல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
க்ளாஸிக் கூட்டணி: சூழல் இப்படி இருக்க மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டானார் சிம்பு. அப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரிலும் சிம்புவின் கெட்டப்பும், நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படம், பார்க்கிங் இயக்குநர் இயக்கத்தில் ஒரு படம், சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவிருக்கிறார். இவற்றில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகும் படம் சிம்புவுக்கு 50ஆவது படமாக உருவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்புவின் சம்பளம்: இந்நிலையில் சிம்புவின் சம்பளம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி அடுத்தடுத்த படங்களுக்கு பேச வரும் தயாரிப்பாளர்களிடம் தனது சம்பளம் 50 கோடி ரூபாய் என்று ஒரே போடாக போடுகிறாராம். இதன் காரணமாக தயாரிப்பாளர்கள் உச்சக்கட்ட ஷாக்கில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த டாபிக்தான் கோலிவுட்டில் இப்போது ஹாட் டாபிக்காக ஓடிக்கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











