சிம்பு தான் என்னோட குரு... ஹீரோ ஆனபிறகும் நன்றி மறவாத சந்தானம்!
சென்னை: நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் காமெடியனாக அறிமுகமாகி இப்போது ஹீரோவாக பல படங்களில் கலக்கிக் கொண்டு உள்ளார்
தெலுங்கில் ஏஜன்ட் சாய் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற படம் தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற பெயரில் சந்தானம் நடிப்பில் உருவாகி வருகிறது
தன்னை தூக்கி விட்டவர்களை ஒருபோதும் மறவாத சந்தானம் சிம்பு தான் தன்னுடைய குரு என கூறியுள்ளார்.

லொள்ளு சபா
ட்ரெண்டுக்கு ஏற்றார்போல் கவுண்டர் நகைச்சுவை மூலம் கலாய்ப்பதில் நடிகர் சந்தானம் மிகவும் ஸ்பெஷலிஸ்ட். சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன் திரைப்படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமான சந்தானம். அதற்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியில் நடித்து வந்தார். லொள்ளு சபா இவருக்கு ஓரளவுக்கு புகழை பெற்று தந்தது.

காமெடிக்காகவே பல படங்கள்
மன்மதன் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் அதை தொடர்ந்து சச்சின்,வல்லவன் என படிப்படியாக சிறு சிறு வேடங்களில் நடித்து முன்னணி காமெடியனான சந்தானம் சிவா மனசுல சக்தி,ஓகே ஓகே, கண்டேன் காதலை, தேசிங்கு ராஜா என சந்தானம் நடிப்பில் வெளியான பல படங்கள் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இவரது காமெடிக்காகவே பல படங்கள் வெற்றி பெற்றது என்று சொன்னால் அது மிகையாகாது.

மூன்று வேடங்களில்
முன்னணி காமெடியனாக வலம் வந்து நின்று கொண்டிருக்கும் போதே திடீரென ரூட்டை மாற்றி ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த சந்தானத்திற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை அளித்தனர். இம்சை அரசன் 23ம் புலிகேசி என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தில் ஹீரோவாக நடித்த சந்தானம் அதை தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்க போடு போடு ராஜா, சர்வர் சுந்தரம், தில்லுக்கு துட்டு பாகம் 2,ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜயராஜ் மற்றும் கடைசியாக வெளியான டிக்கி லோனா என சந்தானம் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது . இதில் டிக்கிலோனா படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்து கலக்கி இருப்பார்

சிம்பு தான் என் குரு
இவ்வாறு காமெடியனாகவும் ஹீரோவாகவும் அதேசமயம் தயாரிப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கும் சந்தானம் எப்பொழுதும் நன்றியை மறவாதவர். தன்னை தூக்கி விட்டவர்களை வாழ்நாள் முழுவதும் மறவாத சந்தானம் தன்னை முதல் முறையாக திரைத்துறையில் அறிமுகபடுத்திய சிம்பு தான் தன்னுடைய குரு என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications