சிம்புவின் 50ஆவது படம்.. 150 கோடி ரூபாய் பட்ஜெட்.. டி.ஆர். துணை.. சீக்ரெட் சொன்ன பிரபலம்
சென்னை: சிம்புவின் நடிப்பில் கடைசியாக வெளியான பத்து தல, வெந்து தணிந்தது காடு, மாநாடு ஆகிய மூன்று படங்களுமே நல்ல வரவேற்பை பெற்றன. குறிப்பாக மாநாடு திரைப்படம் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்தது. தற்போது தக் லைஃப் படத்தில் நடித்துவரும் அவர் அடுத்ததாக மூன்று படங்களில் வரிசையாக கமிட்டாகியிருக்கிறார். அவற்றில் தனது 50ஆவது படத்தை தானே தயாரிக்கிறார் என்பதும்; அதற்கு பட்ஜெட் 150 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எஸ்டிஆர், AtMan என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் சிம்பு. சிறு வயதிலிருந்தே நடித்துவரும் அவர் இடையில் சில கவன சிதறல்களாலும், காதல் தோல்வியாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கியிருந்தார். உடல் எடையும் ரொம்பவே கூடியிருந்தார். அதனைத் தொடர்ந்து சிம்புவால் இனி கம்பேக்கே கொடுக்க முடியாது என்று ஒருதரப்பினர் கூறினார்கள். ஆனால் ரசிகர்களோ எங்கள் எஸ்டிஆர் கண்டிப்பாக மீண்டும் வருவார் என்று உறுதியாக நம்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தரமான கம்பேக்: அவர்களின் உறுதியை குலைக்காத விதம் சிம்பு உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அதில் சிம்புவின் நடிப்பையும், எனர்ஜியையும் பார்த்த அவரது ரசிகர்கள் இனி சிம்புவின் ஆட்டத்தை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார்கள். அதற்கேற்றபடி வெந்து தணிந்தது காடு, பத்து தல படங்களில் நடித்தார். இவற்றில் பத்து தல மட்டும் கொஞ்சமாக சறுக்கியது.
தக் லைஃப்: சூழல் இப்படி இருக்க மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் ஹீரோவாக நடிக்கும் தக் லைஃப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் சிம்பு. அநேகமாக அவர்தான் படத்தின் வில்லனாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்டிப்பாக இதில் சிம்புவின் கேரக்டர் படத்துக்கு பக்கபலமாக இருக்கும் என்றும்; இந்தப் படமும் சிம்புவின் கரியரில் மிகப்பெரிய படமாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டானார் அவர்.
சிம்பு 50: முதலில் அந்தப் படத்தை கமல் தயாரிப்பதாக இருந்தார். ஆனால் ஓவர் பட்ஜெட் காரணமாக அவர் வெளியேறிவிட்டார். அதனைத் தொடர்ந்து அந்தப் படத்தை தனது 50ஆவது படமாக உருவாக்க திட்டமிட்ட சிம்பு தானே தயாரிக்கவும் முன் வந்திருக்கிறார். அதுகுறித்து அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனது 49ஆவது படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணனும், 51ஆவது படத்தை (GOD Of Love) அஸ்வத் மாரிமுத்துவும் இயக்குகிறார்கள். சிம்புவின் 50ஆவது படம் சரித்திர கால கதையாக உருவாகிறது என்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கையில் தெரிகிறது.
ஏன் ரிஸ்க்: இந்தப் படத்தின் பட்ஜெட் மொத்தம் 150 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதுதொடர்பாக பிரபல பத்திரிகையாளர் அந்தணன் பேசுகையில், "சிம்புவின் 50ஆவது படத்துக்கு 150 கோடி ரூபாய் பட்ஜெட். மிகப்பெரிய நடிகர்களின் படங்களுக்குத்தான் இவ்வளவு பெரிய பட்ஜெட் போடப்படும். ஆனால் சிம்புவுக்கு ஏன் இவ்வளவு பெரிய பட்ஜெட் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. ஆனாலும் அவர் இப்படி இறங்கியதற்கு காரணம் அவரது தந்தைதான்.
என்ன காரணம்: அதாவது சிம்புவின் தந்தையான டி.ராஜேந்தருக்கு நிறைய தயாரிப்பு நிறுவனங்களை தெரியும். படத்துக்கான ஷூட்டிங் அனுமதி, செட் அமைப்பு ஆகியவைகளை டி.ராஜேந்தரால் இலவசமாகவே பெற்று கொடுக்க முடியும். அந்த தைரியத்தில்தான் சிம்பு இவ்வளவு பெரிய ரிஸ்க்கை எடுத்து தனது 50ஆவது படத்தை இத்தனை கோடி பட்ஜெட்டில் தயாரிக்க களமிறங்கியிருக்கிறார்" என்றார்.


Click it and Unblock the Notifications











