»   »  இனி என் படத்தில் 'தல' ரெபரென்ஸ் இருக்காது: ஃபேஸ்புக்கில் சிம்பு ஓபன் டாக்

இனி என் படத்தில் 'தல' ரெபரென்ஸ் இருக்காது: ஃபேஸ்புக்கில் சிம்பு ஓபன் டாக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது படங்களில் இனியும் அஜீத் பற்றி ரெபரென்ஸ் தேவையில்லை என்று நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் உள்ள சிம்பு ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக்கில் இணைந்தார். ஃபேஸ்புக்கில் கணக்கு துவங்கிய கையோடு ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.

ரசிகர்கள் கேட்ட கேள்விகளில் சில இதோ,

பில்லா 3

பில்லா 3

கேள்வி: அண்ணா நீங்களும், வெங்கட் பிரவும் சேர்ந்து பில்லா 3 பண்ணுவீங்களா? அப்படி பண்ணா எப்போ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும்?

பதில்: அடுத்த ஆண்டு இறுதியில் கண்டிப்பாக வரும்.

தெலுங்கு படம்

தெலுங்கு படம்

கேள்வி: நீங்கள் எப்பொழுது நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பீர்கள்? தெலுங்கு மக்கள் உங்களை விரும்புகிறார்கள்.

பதில்: தெலுங்கு படத்தில் நடிக்க எப்பொழுதுமே ஆசை. சரியான நேரம் வந்தால் நிச்சயம் நடிப்பேன்.

பிடித்த இயக்குனர்

பிடித்த இயக்குனர்

கேள்வி: நீங்கள் பணியாற்றிய இயக்குனர்களில் உங்களுக்கு பிடித்தது யார்?

பதில்: அனைவருமே பிடிக்கும். அதில் கவுதம், ரவிக்குமார், வெங்கடேஷ், துரை, க்ரிஷ், சரவணன், தரணி, விஜய், விக்கி பிடிக்கும்.

தமிழ் பிரேமம்

தமிழ் பிரேமம்

கேள்வி: பிரேமம் படத்தை தமிழில் ரீமேக் செய்தால் உங்களை பார்க்க வாய்ப்பு உள்ளதா? அந்த படத்தில் நடிக்க நீங்கள் தான் பொருத்தமானவர்.

பதில்: பிரேமம் படத்தை ரீமேக் செய்யக் கூடாது. சில படங்களை அப்படியே விட்டுவிட வேண்டும்.

தனுஷ்

தனுஷ்

கேள்வி: செல்வா சார் இயக்கத்தில், யுவன் இசையில் நீங்களும், தனுஷும் சேர்ந்து ஒரு படத்தில் நடித்தால் என்ன? நீங்கள் அதை ஏற்பீர்களா? அப்படி நடந்தால் அது வேற லெவல்.

பதில்: முதலில் நீங்கள் எல்லோரும் அதை ஏற்பீர்களா?

தல

தல

கேள்வி: உங்களின் அச்சம் என்பது மடமையடா அல்லது அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தல ரெபரன்ஸ் இருக்குமா, தல ரசிகர்கள் காத்திருக்கிறோம்.

பதில்: அஜீத் சார் பற்றி யாருமே பேசாதபோது அவரது பிளாப் படத்தின் கட்அவுட்டை பயன்படுத்தி தல என கத்தினேன்..அதில் இருந்து அவர் பெரியவராக உள்ளார். அனைவரும் அவரின் பெயரை பயன்படுத்துகிறார்கள். அதனால் இனியும் அப்படி செய்ய வேண்டியது இல்லை. அவர் வளர்ச்சியில் மகிழ்ச்சி.

சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன்

கேள்வி: ரைசிங் ஸ்டார் சிவகார்த்திகேயன் பற்றி சில வார்த்தைகள்.

பதில்: அவரை நினைத்து பெருமையாக உள்ளது. ரெமோவில் அவரது அர்ப்பணிப்பு பிடித்துள்ளது. அவருக்கு என் வாழ்த்துக்கள்.

English summary
Simbu has joined Facebook on sunday and chatted with his fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil