தேசிய விருது இயக்குனருடன் கைகோர்க்கும் சிம்பு... அடுத்தடுத்த படங்களால் குஷி!

சென்னை : நடிகர் சிம்புவின் மாநாடு படம் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து சிம்புவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

தற்போது தரமணி இயக்குனர் ராம் உடன் இணைந்து அவர் புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு

நடிகர் சிம்பு ஈஸ்வரன் படத்திற்கு பிறகு மாநாடு படத்தில் நடித்து வெளியாகி இருந்தது. இந்தப் படம் கடந்த 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான நிலையில் படத்தின் வசூல் மற்றும் விமர்சனங்கள் சிறப்பாக அமைந்துள்ளது. இதையடுத்து அவருக்கு தற்போது பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

தற்போது சிம்பு கைவசம் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் வெந்து தணிந்தது காடு, ஓபிலி கிருஷ்ணாவின் பத்து தல, கோகுல் இயக்கத்தில் கொரானா குமார் மற்றும் ஹன்சிகா உடன் இணைந்து நடித்துவரும் மகா போன்ற படங்கள் உள்ளன.

ஸ்லிம்மான சிம்பு

ஸ்லிம்மான சிம்பு

ஈஸ்வரன் படத்திற்கு முன்னதாக தன்னுடைய உடல் எடையை கணிசமாக குறைத்து அழகாகவும் ஸ்லிம்மாகவும் மாறியுள்ளார் சிம்பு. இந்நிலையில் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள மாநாடு படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது. அந்த படத்தின் மூலம் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.

தேசிய விருது இயக்குனருடன் அடுத்த படம்

தேசிய விருது இயக்குனருடன் அடுத்த படம்

தற்போது நந்தா பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் சிம்பு ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேசிய விருது இயக்குனர் ராமுடன் சிம்பு கைகோர்க்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நிவின் பாலியை இயக்கிவரும் ராம்

நிவின் பாலியை இயக்கிவரும் ராம்

கற்றது தமிழ், தரமணி உள்ளிட்ட படங்களை இயக்கி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள இயக்குனர் ராம் தனது தங்கமீன்கள் படத்திற்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். தற்போது மலையாளத்தில் நிவின் பாலியை வைத்து படம் இயக்கி வருகிறார் ராம்.

சிம்புவுடன் அடுத்த படம்

சிம்புவுடன் அடுத்த படம்

இந்த படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து அவர் புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Recommended Video

Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil
குஷியில் சிம்பு

குஷியில் சிம்பு

இதனிடையே இயக்குனர் மிஷ்கின், சுசீந்திரன், நெல்சன் உள்ளிட்ட இயக்குனர்களிடமும் சிம்பு கதை கேட்டு வருகிறாராம். மாநாடு படம் கொடுத்த வெற்றியை அடுத்து சிம்பு மிகவும் குஷியாகவே காணப்படுகிறார். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. விரைவில் இயக்குனர் ராமுடன் இணைந்து அவர் சிறப்பான படத்தை ரசிகர்களுக்கு கொடுப்பார் என்று நம்பலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X