தக் லைஃப்பில் இணைந்த சிம்பு.. கார்ல சும்மா மாஸ் இன்ட்ரோ.. கமல்ஹாசனுக்கு மகனாக நடிக்கிறாரா?

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் நாயகன் படத்திற்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து சிம்பு நடித்து வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பிலிருந்து கசிந்த புகைப்படம் ஏற்கனவே இந்த தகவலை லீக் செய்த நிலையில், சிம்புவின் தக் லைஃப் லுக் உடன் கூடிய இன்ட்ரோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் தக் லைஃப் திரைப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டன. ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அவர்கள் பங்கேற்க முடியாத சூழலில் விலகி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu joins Kamal Haasan s Thug Life announced with official intro video

இந்நிலையில், அவர்களுக்கு பதிலாக சிம்புவும் நடிகர் அசோக் செல்வனும் இந்த படத்தில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின. தற்போது சிம்புவின் என்ட்ரி வீடியோ வெளியாகி எஸ்டிஆர் ரசிகர்களை சந்தோசத்தில் அழுத்தி உள்ளது.

ஆரம்பிக்காத எஸ்டிஆர் 48?: கமல்ஹாசன் தயாரிப்பில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் பிரம்மாண்டமாக நடிக்கப் போவதாக அறிவிக்கப்பட்ட எஸ்டிஆர் 48 திரைப்படம் இன்னமும் ஆரம்பிக்காமல் உள்ள நிலையில், கமல் தற்போது நடித்து வரும் தக் லைஃப் படத்தில் சிம்பு இணைந்துள்ளார்.

Simbu joins Kamal Haasan s Thug Life announced with official intro video

நியூ தக்: ஏற்கனவே சிம்புவின் லுக் லீக் ஆன நிலையில் அதிகாரப்பூர்வமாக ஒரு அப்டேட்டை வெளியிட்டு விடலாம் என்கிற நோக்கத்துடன் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இணைந்து தற்போது நியூ தக் இன் தி டவுன் என புழுதி பறக்க காரில் காளை படத்தில் சிம்பு இருந்த கெட்டப்பில் களம் இறங்கிய காட்சியை வெளியிட்டுள்ளனர். எஸ்டிஆர் 48 படத்துக்காக நீண்ட முடியை விட்டிருந்த சிம்பு தற்போது அதே லுக்கில் இந்த படத்தில் நடித்து வருகிறார்.

கமல்ஹாசன் மகனாக?: மணிரத்தினம் இயக்கத்தில் ஏற்கனவே செக்கச்சிவந்த வானம் திரைப்படத்தில் சிம்பு நடித்திருந்தார். அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, ஜோதிகா மற்றும் விஜய் சேதுபதி என பெரிய நட்சத்திர பட்டாளம் அந்த படத்தில் நடித்திருந்தது. அந்தப் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்திலும் சிம்புவின் நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சி செய்தார். ஆனால் அந்த படத்தில் சிம்பு நடிக்கவில்லை. இந்நிலையில், தக் லைஃப் படத்தில் இணைந்துள்ள சிம்பு கமல்ஹாசனின் மகனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Simbu joins Kamal Haasan s Thug Life announced with official intro video

விருமாண்டி அபிராமி: தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் சத்யா பட கமல் கெட்டப்பில் நடித்து வரும் காட்சிகள் லீக் ஆகின. அவருடன் விருமாண்டி படத்தில் ஜோடியாக நடித்த அபிராமி, நாசர், சிம்பு மற்றும் வையாபுரி இருந்த புகைப்படம் ஒன்று கசிந்து படத்தில் நடித்து வரும் நடிகர்கள் மற்றும் அவர்களது லுக்கை கசியவிட்டு விட்டன.

சிம்புவுக்கு ஜோடி திரிஷாவா?: தக் லைஃப் படத்தில் கமலுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அபிராமி கமலுக்கு ஜோடியாக நடித்து வருவதாகவும் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடிக்க போவதாகவும் கூறுகின்றனர். அசோக்செல்வன் ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X