சிம்பு செம ஃபார்மில் இருக்கிறார்போல.. வெற்றிமாறன் படத்துக்காக அவர் இதை செய்கிறாரா?
சென்னை: எஸ்டிஆர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு கடைசியாக தக் லைஃப் திரைப்படத்தில் நடித்திருந்தார். படம் படுதோல்வியை சந்தித்தது. அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, வெற்றிமாறன் ஆகியோரின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இவற்றில் வெற்றிமாறனுடனான படத்தின் மீது ஒட்டுமொத்த திரைத்துறைக்கும் அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
டி.ராஜேந்தரின் மகனான சிம்பு சிறு வயதிலிருந்தே நடித்துவருபவர். நடிப்பு மட்டுமின்றி இளம் வயதிலேயே மன்மதன், வல்லவன் ஆகிய படங்களையும் அவர் இயக்கினார். அதேபோல் பாடல்கள் பாடுவது, எழுதுவது, இசையமைப்பது என சினிமாவில் இருக்கும் பெரும்பான்மையான ப்ளாட்பார்ம்களில் தனது தடத்தை அழுத்தமாக பதித்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கோலிவுட்டில் அதீத திறமை பெற்றவர்களில் ஒருவர் என்கிற பெயரையும் அவர் எடுத்திருக்கிறார்.
இடையில் வந்த பிரேக்: ஃபுல் ஃபார்மில் சென்றுகொண்டிருந்த சிம்புவுக்கு இடையில் இரண்டு காதல் தோல்விகள் அரங்கேறின.நயனுடனான பிரேக்கப்புக்கு பிறகு அவர் நடித்துக்கொண்டுதான் இருந்தார். ஆனால் ஹன்சிகாவுடனான காதல் முறிவுக்கு பிறகு அவரது சிந்தனைகள் எல்லாம் ஆன்மீகம் பக்கம் சென்றது. மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் சில பிரச்னைகள், உடல் எடை அதிகரித்தல் என சிம்புவால் ஒருமித்த கவனத்தோடு சினிமாவை அணுக முடியவில்லை. இதன் காரணமாக இடையில் கொஞ்சம் பிரேக் எடுத்தார்.
சிம்புவின் இரண்டாவது இன்னிங்ஸ்: இப்படிப்பட்ட நிலைமையில்தான் எண்ணங்களை ஒருமுகப்படுத்தி, உடல் எடையை குறைத்து தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கினார். அதில் அவர் நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. அந்த வெற்றிகள் கொடுத்த உற்சாகத்தின் காரணமாக மீண்டும் பழைய சிம்புவாக மாறி தொடர்ந்து படங்களில் கமிட்டாகியிருக்கிறார் அவர். எனவே அவரது ரசிகர்கள் உச்சக்கட்ட வைபில் இருந்தார்கள்.

தக் லைஃப் படத்தில் சிம்பு: ஆனால் அந்த வைபை மணிரத்னம் இயக்கிய தக் லைஃப் திரைப்படம் குறைத்துவிட்டது. முதன்முறையாக கமலுடன் சிம்பு நடித்திருந்ததால்; கண்டிப்பாக பெரிய சம்பவம் இருக்கிறது என்று நம்பியிருந்தார்கள் ரசிகர்கள். படமோ படுதோல்வியை சந்தித்தது. படத்தை பார்த்த ஃபேன்ஸோ, இந்தப் படத்தில் சிம்பு நடித்திருக்கவே வேண்டாம் என்று ஓபனாகவே கூறினார்கள்.
அடுத்த படங்கள்: தக் லைஃப் படத்தை முடித்திருக்கும் சிம்பு அடுத்ததாக அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, வெற்றிமாறன் ஆகியோருடைய இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். வெற்றியும் சிம்புவும் இணைந்திருக்கும் படத்தின் ப்ரோமோ ஷூட்டிங் சமீபத்தில்தான் நடந்தது. அப்படத்தில் நெல்சன் திலீப்குமாரும் முக்கியமான ரோலில் நடிக்கிறார் என்றும் தகவல்கள் வருகின்றன. ஆனால் அதில் எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை.
புதிய தகவல்: இப்படம் வடசென்னை உலகத்தில்தான் நடக்கும் என்று உறுதிப்படுத்தியிருக்கிறார் வெற்றி. எனவே தனுஷ் போல் சிம்புவும் சம்பவத்துக்கு ரெடியாகிவிட்டதாக எஸ்டிஆர் ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி இப்படத்துக்காக வெறும் பத்தே நாட்களில் பத்து கிலோ உடல் எடையை குறைக்க சிம்பு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











