சிம்புவின் காதல் தோல்விகள்..!

By Shankar

சிம்புவின் காதல்களும் காதல் தோல்விகளும் என புத்தகமே போடும் அளவுக்குப் போய்விட்டது அவரது தனிப்பட்ட வாழ்க்கை.

சாதாரண ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை யாரும் எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் பல கோடி பேர் பார்த்து ரசிக்கும் சினிமாவில் இருப்பவர்களின் வாழ்க்கை யார் கண்ணிலும் தப்புவதில்லை!

அதுவும் வம்பு ஸ்பெஷலிஸ்டான சிம்பு, டீன் ஏஜிலிருந்தே காதல் சீன் போடுவதில் கில்லாடி.

முதல் காதல்

முதல் காதல்

சிம்புவின் முதல் காதல் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் கிடையாது. அரசல் புரசலானதுதான். அதுவும் அத்தனையும் அவரே பரப்பிவிட்டது என்கிறார்கள். பெரிய இடம் என்பதாலோ என்னமோ சிம்பு அவ்வளாக எகிறவில்லை. மாறாக ஒரு ஆடியோவை மட்டும் லீக் செய்திருந்தனர்.

நயன்தாரா

நயன்தாரா

இந்தக் காதல் முறிந்து, அதை வைத்து சிம்புவே ஒரு படமும் எடுத்தார். அதுதான் வல்லவன். அந்தப் படத்தில் அவருடன் நடிக்க ஒப்பந்தமானவர் நயன்தாரா. நயனின் உதடுகளை கடித்தபடி இவர் அடித்த போஸ்டர்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பின.

காதல் அறிவிப்பு

காதல் அறிவிப்பு

சில தினங்களிலேயே சிம்புவும் - நயனும் மிக அந்தரங்கமாக இருந்த சில படங்கள் வெளியாகின. கவனிக்க.. சிம்பு - நயன் தனிமையில் இருந்தபோது, இன்னொரு ஆளை வைத்து படமெடுத்திருக்கிறார். நிச்சயம் இது நயன் எடுத்ததில்லை. அப்படியெனில் எடுத்தது சிம்பு என்பதும், அதை பத்திரிகைகளில் வெளியிட்டதும் அவரே என்பதும் வெட்ட வெளிச்சமானது. இந்தக் காதலும் முறிந்து போனது.

வெறுத்துப் போன நயன்

வெறுத்துப் போன நயன்

தன் காதல் மகா அலங்கோலத்தில் முடிந்தை ஜீரணிக்க முடியாத நயன்தாரா, கொஞ்ச காலம் சென்னைப் பக்கமே வரவில்லை. தெலுங்குப் படங்களில் மட்டுமே நடித்துக் கொண்டிருந்தார். வேறு துணை கிடைத்த பிறகே சென்னைப் பக்கம் வந்தார் என்பது வேறு விஷயம்.

ஹன்சிகாவுடன்...

ஹன்சிகாவுடன்...

நயன்தாராவுடன் காதல் முறிந்தாலும், அவரைப் பற்றி பேசாமலில்லை சிம்பு. அந்தப் பேச்சு, ஹன்சிகாவின் காதல் கிடைக்கும் வரை தொடர்ந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஹன்சிகாவுடன் வேட்டை மன்னன், வாலு படங்களில் ஒப்பந்தமானார் சிம்பு. அப்போதே இருவருக்கும் காதல் என செய்திகள் வெளியாகின.

காதல் அறிவிப்பும் முறிவும்

காதல் அறிவிப்பும் முறிவும்

இருவரும் ஒரு நாள் ட்விட்டரில் காதலை அறிவித்தனர். அறிவித்த ஆறே மாதங்களில் தங்கள் காதலை முறித்துக் கொண்டதாக தனித்தனியாக அறிவித்துள்ளனர்.

காரணம்?

காரணம்?

இந்த முறிவுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். ஒன்று தன் பழைய காதலி நயன்தாராவும் சிம்புவும் மீண்டும் நெருக்கமாகிவிட்டது ஒரு காரணம் என்கிறார்கள். இன்னொன்று, சிம்புவைக் காதலிப்பதாகச் சொன்ன ஹன்சிகா, இன்னொரு பக்கம், தெலுங்கு நடிகர் ஒருவருடன் அந்தரங்கமாக இருந்தார் என்றும், இதனால்தான் சிம்புவுக்கும் அவருக்கும் சண்டை வந்ததாகவும் சொல்கிறார்கள்.

இந்தக் காதல்கள் மட்டும்தானா?

இந்தக் காதல்கள் மட்டும்தானா?

சிம்பு வெளிப்படையாக அறிவித்த காதல்கள் மட்டும்தான் இதெல்லாம். ஆனால் அவர் பற்றி வந்த காதல் அல்லது கசமுசா கிசுகிசுக்களுக்கு அளவே இல்லை. குறிப்பாக தன்னைவிட சீனியர் நடிகைகள் மூன்று பேருடன் அவர் ஏற்கெனவே கிசுகிசுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

நான்காம் பாகம் எப்போ..

நான்காம் பாகம் எப்போ..

இப்போதைக்கு சிம்புவின் காதல் கதைகள் மூன்று பாகங்களாக அரங்கேறியுள்ளன. நான்காம் பாகம் எப்போது என்று கிசுகிசுக்கிறார்கள் மீடியா உலகில்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X