மணிரத்னம் பெண்டை நிமிர்த்தினாலும் ஓவியாவுக்காக நேரம் ஒதுக்கிய சிம்பு
சென்னை: மணிரத்னம் படத்தில் பிசியாக இருந்தாலும் ஓவியாவுக்காகவும் நேரம் ஒதுக்கியுள்ளார் சிம்பு.
சிம்பு தற்போது மணிரத்னத்தின் செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். அவர் படப்பிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதிக்கு உணவு ஊட்டிவிட்ட காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது.
நடிப்பில் பிசியாக இருந்தாலும் இசைக்கும் நேரம் ஒதுக்குகிறார்.

ஓவியா
சிம்பு நடிப்பது தவிர படங்களுக்கு இசையமைக்கவும் செய்கிறார். ஓவியா நடித்து வரும் 90 எம்.எல். படத்திற்கு சிம்பு தான் இசையமைப்பாளர். நடிப்புக்கு இடையே நேரம் ஒதுக்கி காதல் கடிக்குதே உள்ளிட்ட 4 பாடல்களுக்கு இசையமைத்து முடித்துள்ளார் சிம்பு.

படப்பிடிப்பு
90 எம்.எல். படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சிம்பு செக்கச் சிவந்த வானம் படத்தில் நடித்துக் கொண்டே இசையிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

வம்பு
செக்கச் சிவந்த வானம் படப்பிடிப்புக்கு சரியான நேரத்தில் செல்கிறார் சிம்பு. தான் கமிட்டான படத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் இசையமைத்துக் கொடுக்கிறார். சிம்பு என்றால் வம்பு என்பது மாறி சமத்தாகிவிட்டார்.

அறிவிப்பு
சிம்பு அடுத்தடுத்து புதுப்படங்களில் ஒப்பந்தம் ஆக உள்ளாராம். சிம்பு மீது புகார்கள் எழுந்ததால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்படுமோ என்று இருந்த நிலை மாறி அவர் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











