சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் சதி… உஷா ராஜேந்திரன் குற்றச்சாட்டு !
சென்னை : சிம்புவின் வளர்ச்சி பிடிக்காமல் தயாரிப்பாளர் சங்கத்தினர் அவரது படப்பிடிப்பை தடுக்க கட்டபஞ்சாயத்து செய்வதாக சிம்புவின் தாயார் உஷா ராஜேந்திரன் கூறியுள்ளார்.
மேலும், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் நஷ்டத்திற்காக ஏற்கனவே சிம்பு ஒத்துக்கொண்டபடி சம்பளம் இல்லாமல் படத்தில் நடித்து கொடுக்க முடியாது என்றும் உஷா கூறியுள்ளார்.
சிம்பு தற்போது, வெங்கட் பிரபுவுடன் மாநாடு, கெளதம் மேனன் உடன் வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

சிலம்பரசன் சர்ச்சை
தயாரிப்பாளர் சிவசங்கரன், திருப்பதி பிரதர்ஸ், சுபாஷ் சந்திர போஸ், பிடி செல்வக்குமார் மற்றும் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் தயாரிப்பாளர் மைகேல் ராயப்பன் ஆகியோர் சிம்பு கொடுக்க வேண்டிய பணத்திற்காக ஆண்டுகணக்கில் காத்திருந்து, தமிழ் நாடு தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தனர். இதனால், சிலம்பரசன் நடிக்கும் படத்திற்கு ஒத்துழைப்பு தர வேண்டாம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவுறுத்தியதாக சொல்லப்பட்டது. இதனால், சிலம்பரசன் நடிக்கும், வெந்து தணிந்தது காடு படப்பிடிப்பு நடித்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

பிரச்சினைக்கு தீர்வு
இவ்விவகாரம் தொடர்பாக, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளுடன், சிலம்பரசனின் தாய் உஷா நேற்று பேசினார். தயாரிப்பாளர் சிவசங்கரன் உடனான பிரச்னைக்கு, பேசி தீர்வு காணப்பட்டது. இதற்கான கடிதத்தை, தயாரிப்பாளர் சங்கத்திற்கு கொடுத்துள்ளார். லிங்குசாமி உடனான பிரச்னையில், மனிதாபிமானம் அடிப்படையில், வட்டியில்லாத பணத்தை கொடுக்க சம்மதித்துள்ளோம். பி.டி.செல்வகுமார் மற்றும் டி.ராஜேந்தர் உடனான பிரச்னையில், சிலம்பரசனுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

நீதிமன்றத்தில் உள்ளது
மைக்கேல் ராயப்பன் உடனான பிரச்னை, நீதிமன்றத்தில் வழக்காக உள்ளது. இதற்கு முன், சிலம்பரசன் மீதான காழ்ப்புணர்ச்சியால், அவர் நடிக்க முடியாதபடி, விஷால் கட்டப்பஞ்சாயத்து செய்தார். மைக்கேல் ராயப்பன் மீது, சிலம்பரசன் தொடுத்த வழக்கு நிலுவையில் உள்ளதால், அது குறித்து, தயாரிப்பாளர் சங்கம், எந்த கட்டப்பஞ்சாயத்தும் செய்ய முடியாது என்று சிலம்பரசனின் தயார் ஊஷா கூறியுள்ளார்.

சம்பளம் இல்லாமல் நடிக்க முடியாது
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தின் நஷ்டத்திற்காக ஏற்கனவே சிம்பு ஒத்துக்கொண்டபடி சம்பளம் இல்லாமல் படத்தில் நடித்து கொடுக்க முடியாது என்றும் உஷா கூறியுள்ளார். மேலும், அந்த படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதி காட்சிவரை அவர் தான் நடித்தார். டூப் யாரும் இல்லை என்று கூறினார். வெந்து தணிந்தது காடு ஷூட்டிங் இரண்டாவது கட்டப் படப்பிடிப்புக்கு போகும்போது தடுத்து நிறுத்தினால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். சிலம்பரசன் நன்றாக வளர்ந்து வருவதுதான் பிரச்சினை என்று நினைக்கிறேன். அவர் இன்னும் மேலே மேலே நன்றாக வருவார் எல்லாப் பிரச்சினையும் அவர் தீர்ப்பார் என்று உஷா டி.ராஜேந்தர் கூறினார்.

காதல் அழிவதில்லை
காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சிம்பு. நடிகர், பாடகர், இயக்குனர் என பல திறமைகளை கொண்டு இருந்தார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கும் சிம்பு, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஷூட்டிங் போது டைமுக்கு வர மாட்டார் என்பதே இவரின் மேல் பல தயாரிப்பாளர்கள் வைக்கும் விமர்சனங்களை வைத்தனர். இந்த சூழ்நிலையில் வெளியான அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் படு தோல்வியை சந்தித்து.

ஈஸ்வரன்
இந்த திரைப்படத்தின் வெற்றியை அடுத்து, அசுர வளர்ச்சியுடன் குண்டாக இருந்த சிம்பு உடலை மெலிந்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் பொங்களுக்கு திரையரங்கில் வெளியாகி வணிகரீதியாக வெற்றியைப் பெற்றுத்தந்தது. சிம்புவின் இந்த திடீர் மாற்றம் அவரது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Recommended Video

மாநாடு
வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார். இதில் சிம்பு , அப்துல் காலிக் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை கல்யாணி பிரியதர்ஷன் சிம்புக்கு ஜோடியாக நடித்துள்ளார். இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவாக உள்ள வெந்து தணித்த காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து பத்து தல என்ற படத்தில் நடிக்க உள்ளார்.


Click it and Unblock the Notifications











