ஹீரோ .. ஹீரோ ..

By Staff

இது இளம் கதாநாயகர்களுக்கு கையில் அடிபடும் காலம் போலிருக்கிறது.

ரசிகர்கள் தள்ளிவிட்டதால் தனுஷ் கையை ஒடித்துக் கொண்டு வீட்டில் படுத்திருக்கும் நிலையில், உடற் பயிற்சிக்காகபளு தூக்கிய சிம்புவின் இடது கை ஜவ்வு கிழிந்துள்ளது. இதையடுத்து கையில் மாவுக் கட்டுடன் ஓய்வில்இருக்கிறார் சிம்பு.

தற்போது குத்து படத்தில் நடித்து வரும் சிம்பு, இப் படத்தில் கதாபாத்திரத்துக்காக உடற்கட்டை ஏற்ற நந்தனத்தில்உள்ள உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் இங்கு பளு தூக்கியபோதுஅவரது இடது கையில் தசை பிசகியது.

உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். கையில் கட்டு போடப்பட்ட நிலையில்தி.நகரில் உள்ள தனது வீட்டில் ஓய்வுவெடுத்து வருகிறார்.

இது குறுத்து சிம்பு கூறுகையில், வழக்கமாக உடற்பயிற்சி செய்யும் நான் கோவில் படத்தின் படப்பிடிப்புக்காகநாகர்கோவில் சென்று விட்டதால் சில வாரம் உடற்பயிற்சி செய்யாமல் இருந்தேன். அந்தப் படத்தில் இன்னும் ஒருபடல் காட்சி மட்டும் பாக்கி உள்ளது.

இதையடுத்து குத்து படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். படத்தில் என் கதாபாத்திரத்துக்காக என் உடல்கட்டுமஸ்தாக வேண்டும் என்று இயக்குநர் கூறியதால், உடற்பயிற்சிக் கூடத்தில் பளு தூக்கினேன்.

வழக்கத்திற்கு மாறாக கூடுதல் எடையைத் தூக்கியதால் எனது இடது கையில் தசை பிசகி ஜவ்வு கிழிந்துவிட்டதுஎன்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X