துபாய்... புதுக்கேமரா... நயனுடன் லிப்லாக்... 'போட்டோ லீக்' பற்றி சிம்பு சொல்லும் புதுக்கதை!
சிம்பு - நயன்தாரா லிப்லாக் புகைப்படங்கள் வெளியானது எப்படி என்பது தெரியவந்துள்ளது.
Recommended Video

சென்னை: தன்னுடன் நயன்தாரா நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியானது எப்படி என்பது குறித்து நடிகர் சிம்பு மனம் திறந்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சிம்புவும் நடிகை நயன்தாராவும் வல்லவன் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. இதை அவர்களும் உறுதிப்படுத்தினர்.
ஆனால் இந்த காதல் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிய முடிவு செய்தனர். அப்போது, நயன்தாராவுக்கு சிம்பு லிப்லாக் முத்தம் தருவது போன்ற புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

விலகாத மர்மம்
சினிமா துறையினர் மட்டுமின்றி, பொது மக்கள் மத்தியிலும் இந்த விஷயம் பெரிதாக பேசப்பட்டது. அந்த புகைப்படங்கள் எப்படி வெளியாகின என்பது மர்மமாகவே இருந்து வந்தது.

துபாய் கேமரா
இந்நிலையில் அந்த புகைப்படங்கள் வெளியானது குறித்து நடிகர் சிம்பு சில விஷயங்களை தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது, "நாங்கள் துபாயில் புது கேமரா வாங்கினோம். அந்த கேமராவில்தான் ‘அந்தப்படம்' எடுத்தோம்.

வெளியானது எப்படி
அதை யாரோ லீக் செய்து விட்டார்கள். அந்த சம்பவம் என்னை மிகவும் பாதித்தது.என்னால் ஒரு பெண்ணின் பெயர் கெடுகிறதே என்று நான் அவர்களின் அனுமதி இல்லாமல் எந்தப்பெண்ணையும் தொடுவதில்லை என சிம்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

காதல் சர்ச்சை
சிம்புவை போன்றே நடிகை நயன்தாராவும் எப்போதுமே சர்ச்சைகளில் சிக்கிக்கொள்வார். சிம்புவுடனான காதல் முறிவை தொடர்ந்து, பிரபுதேவாவை காதலித்தார் நயன்தாரா. அந்த காதலும் நிலைக்காமல் போன நிலையில், தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை அவர் காதலித்து வருகிறார். விக்னேஷ் சிவனும் நயன் மீது உயிராக இருப்பதால், இந்த காதல் கைக்கூடும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











