சிம்புவின் சோலோ படம் ஸ்டார்ட் அகிடுச்சா?.. பார்க்கிங் இயக்குநர் ஃபயரா இருந்தா தீபாவளி சரவெடிதான்!
சென்னை: பத்து தல படத்திற்கு பிறகு சிம்பு சோலோவாக நடிக்கும் படங்கள் கடந்த 2 ஆண்டுகளாக உருவாகாமல் இருந்தன. கமல்ஹாசன் உடன் இணைந்து மணிரத்னம் இயக்கத்தில் தக் லைஃப் படத்தில் மட்டும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், பார்க்கிங் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்புவின் 49வது படம் ஆரம்பமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹரிஷ் கல்யாண், எம்.எஸ். பாஸ்கர், இந்துஜா ரவிச்சந்திரன் நடிப்பில் வெளியான பார்க்கிங் திரைப்படம் குறைவான பட்ஜெட்டில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த படத்தை பார்த்த உடனே சிம்புவுக்கு பிடித்துப்போய் அவருடைய இயக்கத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார்.

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கப்போகும் படம் சிம்புவின் 50வது படமாக மாறியுள்ளது. அந்த படத்திற்கு பிறகு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்புவின் 51வது படம் உருவாகும் என்றும் அறிவித்துள்ளனர்.
சிம்பு படம் ஸ்டார்ட்: பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்று வருவதாக ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில் ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு செம மாஸான லுக்கில் இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் ரொம்பவே ஹேப்பியாகி விட்டனர்.

தீபாவளிக்கு சம்பவம் உறுதி: மார்ச் மாதமே சிம்புவின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்றால், இந்த ஆண்டு தீபாவளிக்கு சிம்புவின் படம் வெளியாவது உறுதி என்கின்றனர். அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுக்கும் முடிவுடன் சிம்பு இருப்பதாகவும் அவர் மற்ற இளம் நடிகர்களுக்கு பாடல்களை பாடிக் கொடுத்தாலே அந்த படங்களும் பாடல்களும் ஹிட் அடித்து வரும் நிலையில், சிம்புவும் கம்பேக் கொடுப்பார் என்கின்றனர்.

தக் லைஃப் தடம் பதிக்கும்: பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு மணிரத்னம் இயக்கத்தில் தரமான சம்பவமாக தக் லைஃப் படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாக காத்திருக்கிறது. நாயகன் படத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள படம் என்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











