சிம்பு ரசிகர்களே.. உங்களுக்கு டபுள் ட்ரீட்!

கௌதம் மேனன் படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது

Recommended Video

சிம்பு அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது- வீடியோ

சென்னை: சிம்பு அடுத்த படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிம்பு சுந்தர் சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் தொடர்ந்து வெங்கட் பிரபுவின் மாநாடு திரைப்படத்திலும் நடிக்க இருக்கிறார்.

சிம்பு-சுந்தர் சி கூட்டணி, சிம்பு-வெங்கட் பிரபு கூட்டணி என அடுத்தடுத்து ஹாட் அப்டேட் கிடைத்த ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுக்கும் விதமாக கௌதம் மேனன்-சிம்பு கூட்டணி அறிவிப்பு வெளியானது.

Simbu plays dual role in Gautham Menon film!

தற்போது அந்த படத்தில் சிம்பு இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களின் வெற்றிக்குப் பிறகு சிம்பு, கௌதம் மேனன், ஏஆர்.ரஹ்மான் இணையும் படம் இதுவாகும்.

சிம்பு இரட்டை வேடத்தில் நடித்த மன்மதன் மற்றும் சிலம்பாட்டம் திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றிபெற்றன. தற்போது மீண்டும் இரட்டை வேடத்தில் கலக்க உள்ளார்.

பொழுதுபோக்கு கமர்ஷியல் படமாக இப்படம் தயாராக உள்ளது. படத்தின் கதை தொடர்பான விஷயங்கள் வெளியிடப்படவில்லை. நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் துருவ நட்சத்திரம் பட வேலைகள் கொஞ்சம் இருப்பதால் அவை முடிந்தவுடன் கௌதம் படப்பிடிப்பை ஆரம்பிப்பார் என சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X