இன்ஸ்டாவில் சாதனை படைத்த முதல் கோலிவுட் ஹீரோ: சிம்புவின் தரமான சம்பவம், கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: சிம்புவின் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் தனி வரவேற்பு கிடைத்து வருகிறது.
Recommended Video
இறுதியாக அவர் நடிப்பில் வெளியான 'மாநாடு' திரைப்படம் மிகப் பெரிய வெற்றிப் பெற்றது.
அதனைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார் சிம்பு.

லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு
தந்தை டி.ஆர். ராஜேந்திரன் இயக்கத்தில் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமான சிம்பு, 'காதல் அழிவதில்லை' படம் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். ஸ்டைல், டான்ஸ், ஆக்சன் என அனைத்திலும் அதிரடிக் காட்டிய சிம்பு, கோலிவுட்டின் லிட்டில் சூப்பர் ஸ்டாராக கலக்கிவந்தார். கமர்சியல் படங்களில் அதிக ஆர்வம் காட்டிய சிம்புவிற்கு, சில படங்கள் மட்டும் பெரிய சக்சஸ் கொடுத்தன. ஆனாலும், அவரது படங்களுக்கு எப்போதும் நல்ல ஓப்பனிங் கிடைத்தது.

சர்ச்சைகளில் இருந்து மீண்ட சிம்பு
சிம்புவின் படங்கள் குறித்த அப்டேட்களை விட, படப்பிடிப்புக்கு அவர் தாமதமாக செல்லும் செய்திகளே அதிகம் வெளியாகின. சிம்பு நடித்த பெரும்பாலான படங்கள், பல சர்ச்சைகளை கடந்தே வெளியாகின. ஆனாலும், அவரது ரசிகர்கள் சிம்புவை தலைமேல் தூக்கி வைத்து கொண்டாடினர். இதையெல்லாவற்றையும் கடந்து, மன்மதன், வல்லவன், சரவணன் என கமர்சியல் சரவெடிகளாக போட்டுத் தாக்கிய சிம்பு, அடுத்த் மொஹா ஹிட் கொடுத்து அசத்தினார்.

விண்ணைத்தாண்டிய விஸ்வரூப வெற்றி
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா, ஏ.ஆர். ரஹ்மான் இணைந்த 'விண்ணைத்தாண்டி வருவாயா' அவருக்கு கிளாசிக் ஹிட் கொடுத்து அசத்தியது. தமிழ் சினிமா ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் படமாக வெளியான 'விண்ணைத்தாண்டி வருவாயா' சிம்புவின் கேரியரில் பெரிய கம்பேக் கொடுத்தது. அதேபோல் கடந்தாண்டு வெளியான 'மாநாடு' திரைப்படமும், சிம்புவுக்கு தரமான ஹிட் கொடுத்தது.

சோஷியல் மீடியாவில் சிம்பு
மாநாடு வெற்றியைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களில் பிஸியாக இருக்கும் சிம்பு, சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். மாநாடு படத்திற்காக சிம்பு உடல் எடையை குறைத்த வீடியோ, அவரது சமூக வலைத்தளங்களில் வெளியாகி செம்ம டிரெண்டிங் ஆனது. இதனிடையே சிம்புவின் ரசிகர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே சென்றது.

முதல் கோலிவுட் ஹீரோ
இந்நிலையில், இன்ஸ்டாகிராமில் சிம்புவை பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 மில்லியனை கடந்துள்ளது. இதன்மூலம் முதன்முறையாக இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த முதல் கோலிவுட் ஹீரோ என்ற பெருமையை சிம்பு தட்டிச் சென்றுள்ளார். இதனை சிம்புவின் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











