மாநாடு படத்திற்கு தயாரான சிம்பு.. நீண்ட தாடியுடன் செம மாஸ் லுக்.. அப்துல் காலிக் ஆட்டம் ஆரம்பம்!

சென்னை: நீண்ட தாடியுடன் இருக்கும் நடிகர் சிம்புவின் மாஸ் லுக் வெளியாகி வைரலாகி வருகிறது.

சமூக வலைதளத்தில் சமீபத்தில் இணைந்த நடிகர் சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் அந்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

மாநாடு படத்தின் அப்துல் காலிக் லுக் இது தான் என்றும், விரைவிலே படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாக போகிறது என்றும் தகவல்கள் பரவி வருகின்றன

நின்று போன ஷூட்டிங்

நின்று போன ஷூட்டிங்

வந்தா ராஜாவாதான் வருவேன் படம் நடிகர் சிம்புவுக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. மாநாடு படம் டிராப் வரை சென்று மீண்டும் தொடங்கிய நிலையில், லாக்டவுன் காரணமாக ஷூட்டிங் பணிகளை தொடங்க முடியாமல் படக்குழு தவித்து வந்தது. அதிக ஆட்களை கொண்டு ஷூட்டிங் நடத்த அனுமதி கிடைக்காத நிலையில் இன்னும் ஷூட்டிங் தொடங்காமல் இருக்கிறது.

ஈஸ்வரன் கழுத்தில் பாம்பு

ஈஸ்வரன் கழுத்தில் பாம்பு

தனது ரசிகர்களுக்கு கண்டிப்பாக சீக்கிரமே ஒரு நல்ல படத்தை கொடுத்து கம்பேக் ஆக வேண்டும் என நினைத்த நடிகர் சிம்பு, மாநாடு ஷூட்டிங் தாமதத்தால், மனம் சோர்ந்து போகாமல், சுசீந்திரன் இயக்கத்தில் சட்டென ஈஸ்வரன் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் வெளியான அந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வேற லெவலில் டிரெண்டானது.

நீண்ட தாடியுடன் சிம்பு

நீண்ட தாடியுடன் சிம்பு

லேட்டஸ்ட்டா மறுபடியும் சோஷியல் மீடியாவில் தனது அக்கவுன்ட்களை தொடங்கிய நடிகர் சிம்பு, தனது ட்விட்டர் பக்கத்தில் இப்போ, கருப்பு கலர் டிசர்ட், கருப்பு கலர் பேன்ட் அணிந்து கொண்டு, நீண்ட தாடியுடன் இருக்கும் செம மாஸான லுக்கை ரசிகர்களுக்கு வெளிப்படுத்தி மிரட்டி உள்ளார்.

அப்துல் காலிக் ஆட்டம்

அப்துல் காலிக் ஆட்டம்

இயக்குநர் வெங்கட் பிரபுவின் அரசியல் ஆட்டமாக உருவாக உள்ள சிம்புவின் மாநாடு படத்தில் அப்துல் காலிக் எனும் கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளார். இந்நிலையில், நீண்ட தாடியுடன் இருக்கும் சிம்புவின் புது கெட்டப், அந்த படத்திற்காகத் தான் என்றும், வரும் நவம்பர் மாதமே ஷூட்டிங் ஆரம்பம் ஆகும் என்றும் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

மாஸ் தலைவா

மாஸ் தலைவா

நடிகர் சிம்புவை எப்படி எல்லாம் ரசிகர்கள் பார்க்க வேண்டும் என்று நினைத்தார்களோ, அவங்களுக்காக அப்படியே நான் வரேன் டா என முடிவெடுத்து, தனது உடம்பை குறைத்த சிம்பு, இப்போ வித விதமான போஸ்டர்களையும், தெறிக்கும் லுக்குகளையும் காட்டி தனது ரசிகர்களையும் குறிப்பாக ரசிகைகளையும் கவர்ந்திழுத்து வருகிறார்.

கடவுளுக்கு நன்றி

கடவுளுக்கு நன்றி

எல்லாம் வல்ல மாபெரும் சக்திக்கு ரொம்ப நன்றி, என்னை இப்படி உருமாற்றியதற்கு என நடிகர் சிம்பு அந்த புகைப்படங்களை பகிர்ந்து சூப்பரான பதிவும் இட்டுள்ளார். மேலும், எப்பவுமே துளி கூட குறையாத அன்பை என் மேல வச்சிருக்கும் எனது ரசிகர்களுக்கும் நன்றி என உருக்கமாக சிம்பு பதிவிட்டு இருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

முகத்தை மறைத்து

முகத்தை மறைத்து

சில வாரங்களுக்கு முன்னதாக நடிகர் சிம்பு, திருப்பதி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார். அப்போது தனது முகத்தை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக துணியை போர்த்தி மறைத்தவாறே சென்ற புகைப்படங்கள் லீக்காகி வைரலான நிலையில், இந்த நீண்ட தாடி லுக்கை மறைக்கத் தான் சிம்பு அவ்வாறு சென்றது தெரியவந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X