சிம்புவின் குரலில் 'தாறு மாறு தக்காளி சோறு'!
வெளிப் படங்களில் பாடுவதை அதிகரித்து வருகிறார் சிம்பு. அதுவும் பிரபல நடிகர்களுக்கு குரல் கொடுப்பதில் ஆர்வம் காட்டுகிறார்.
சமீபத்தில் அவர் பாடியிருப்பது விக்ரம பிரபுவுக்காக.

அவர் இப்போது நடித்து வரும் வீரசிவாஜி படத்தில் தாறு மாறு தக்காளி சோறு... எனும் குத்துப் பாடலைப் பாடியுள்ளார்.
இந்தப் படத்தை நந்தகோபாலின் மெட்ராஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்த ரோமியோ ஜூலியட் படத்தைத் தயாரித்த நிறுவனம் இது.

வீரசிவாஜி படத்தில் விக்ரம்பிரபு, ஷாமிலி நடித்துள்ளனர், கணேஷ் விநாயக் இயக்கியுள்ளார். இமான் இசையமைக்கிறார்.

டங்கா மாரி ஊதாரி மற்றும் எங்க தல எங்க தல பாடல்களை எழுதிய ரோகேஷ்தான் இந்த தாறு மாறு தக்காளி சோறு.. பாடலையும் எழுதியுள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications