ஷூட்டிங்கிற்கு லேட்டா போக காரணமே அவங்க தான்.. தக் லைஃப் நிகழ்ச்சியில் சிம்பு சொன்னது சரியா?

சென்னை: மணிரத்னம் படங்களுக்கு மட்டுமே அதிகாலையிலேயே படப்பிடிப்புக்கு சென்றுவிடுகிறீர்களே மற்ற இயக்குநர்கள் படங்களில் சிம்பு அப்படி செய்வது இல்லையே. மணி சார் மீதுள்ள பயமா? என்கிற கேள்விக்கு தக்ஸ் டாக் எனும் நிகழ்ச்சியில் பதிலளித்த சிம்பு மணி சார் மீது பயம் கிடையாது. அவர் மீது எனக்கு அன்பு தான் அதிகம் என்று பேசிய சிம்பு, சில இயக்குநர்களால் தான் சினிமா ஷூட்டிங்கிற்கு தான் லேட்டாக போக காரணம் என பேசியிருப்பது பரபரப்பை பற்ற வைத்துள்ளது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, ஜோஜு ஜார்ஜ், அபிராமி, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். வரும் ஜூன் 5ம் தேதி உலகளவில் மிகப்பெரிய ரிலீஸாக தக் லைஃப் வெளியாக காத்திருக்கிறது.

Simbu reveals why he turns a latecomer at shooting spot in Thug Life Talks event

வரும் மே 16ம் தேதி நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக இசை வெளியீட்டு விழா நடைபெறும் என அறிவித்துள்ளனர். தக் லைஃப் படத்தை தாண்டி சிம்பு லைன் அப் தற்போது பெரிய லிஸ்டாக நீண்டுகொண்டே செல்கிறது. இந்நிலையில், இயக்குநர்களை குற்றம்சாட்டுவது போல சிம்பு பேசியது சரியா? தவறா? என சமூக வலைதளங்களில் விவாதமே நடைபெற்று வருகிறது.

சிறு வயதில் இருந்தே சினிமா: இயக்குநரும் நடிகருமான டி. ராஜேந்தரின் மகனான சிம்பு சிறு வயதில் இருந்தே சினிமாவில் நடித்து வருகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். நேற்று நடைபெற்ற தக்ஸ் டாக் நிகழ்ச்சியிலும் அதனை சிம்பு நினைவுப்படுத்தி பேசியுள்ளார். நடிப்பதையும் தாண்டி பாடல்கள் எழுதுவது, பாடுவது, இசைப்பது படங்களை இயக்குவது என சகல கலா வல்லவனாகவும் சிம்பு உள்ளார். ஆனால், தனுஷ், சிவகார்த்திகேயன், பிரதீப் ரங்கநாதன் படங்களுக்கு வரும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கூட சிம்பு படங்களுக்கு இன்னமும் வரவில்லை என்பது அவரது ரசிகர்களை அப்செட் ஆக்கியுள்ளது.

Simbu reveals why he turns a latecomer at shooting spot in Thug Life Talks event

மணி சார் போல இயக்குநர்கள் இருந்தால்: மணிரத்னம் படங்களுக்கு மட்டும் எப்படி காலையிலேயே படப்பிடிப்புக்கு சரியாக சென்று விடுகிறீர்கள் எனக் கேட்கின்றனர். அவர் மீது பயம் எல்லாம் இல்லை. அதிக அன்பு தான் உள்ளது. படப்பிடிப்பு தளத்துக்கு அவர் அதிகாலையிலேயே வந்துவிடுகிறார். சில நாட்கள் நான் அவருக்கு முன்னாடி எல்லாம் வந்துவிட்டேன். இன்றைக்கு மணி சார் போல இயக்குநர்களை பார்க்க முடிவதில்லை. அவர்களே ஷூட்டிங்கிற்கு லேட்டாக வரும் போது நடிகர்கள் எப்படி சீக்கிரம் வர முடியும் என பேசியுள்ளார் சிம்பு.

உட்கார்ந்த இடத்திலேயே ஆர்டர்: அதுமட்டுமல்ல ஒரு சில இயக்குநர்கள் படப்பிடிப்பின் போது ஏதாவது கரெக்‌ஷன் இருந்தால் உட்கார்ந்துக் கொண்டே அப்படி பண்ணிடுங்க, இப்படி பண்ணிடுங்கன்னு ஆர்டர் போடுவாங்க. ஆனால், இந்த வயதிலும் மணி சார் நடிகர்கள் இருக்கும் இடத்துக்கே ஓடி வந்து என்ன கரெக்‌ஷன் செய்ய வேண்டுமோ அதை சொல்லிக் கொடுத்து நடிப்பை வாங்குகிறார். இயக்குநர்கள் இவரை போல இருந்தால் நானெல்லாம் ஏன் ஷூட்டிங்கிற்கு லேட்டாக வரப்போகிறேன். எனக்கு சின்ன வயசுல இருந்து தெரிந்ததே சினிமா மட்டும் தான் சார் என்றும் மணி சார் இப்போ கேட்டா கூட அடுத்த 3 படத்துக்கு கால்ஷீட் தர ரெடியாக இருக்கிறேன் எனக்கூறியுள்ளார் சிம்பு.

சிம்பு சொல்வது சரியா?: இளம் இயக்குநர்கள் முதல் சீனியர் இயக்குநர்கள் வரை சினிமாவை கடவுளாகவே வணங்கி வருகின்றனர். பல இளம் நடிகர்களை பாக்ஸ் ஆபீஸ் ஸ்டார்களாக மாற்றி வருவதும் இயக்குநர்கள் தான். மணிரத்னம் போல மற்ற இயக்குநர்கள் இல்லை என சிம்பு சொல்வது சரியா? என்றும் தான் லேட்டாக வருவதை நியாயப்படுத்த சிம்பு இப்படி மற்றவர்கள் மீது கையை காட்டுவது தவறான வாதம் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், சிம்பு இந்த விஷயத்தை ஓபனாக பேசவும் துணிச்சல் வேண்டும் என்றும் அடுத்து அவரை இயக்கப் போகும் இயக்குநர்களுக்கு இது ஒரு எச்சரிக்கை மணி என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X