இந்தியன் 2 படத்தில் சிம்புவுக்கு என்ன கதாபாத்திரம் தெரியுமா?
Recommended Video

சென்னை: இந்தியன் 2 திரைப்படத்தில் சிம்பு போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2.0 திரைப்படத்திற்கு பிறகு ஷங்கர் இயக்க உள்ள படம் இந்தியன் 2. இத்திரைப்படத்திற்காக கமல்ஹாசன் முழுவீச்சில் தயாராகி வருகிறார்.

சில நாட்களாக இப்படம் குறித்து வேகமாக பரவி வரும் தகவல் சிம்பு ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளது. இந்தியன் 2 திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
தற்போது பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளதாகவும், அந்த முக்கிய கதாபாத்திரம் ஒரு போலீஸ் அதிகாரி என்றும் தகவல் வெளியாகியுள்ளது. சில நுணுக்கமான செயல்முறைகளினால் குற்றங்களைக் கண்டறியும் சவாலான கதாபாத்திரத்தில் சிம்பு நடிக்க உள்ளதாகவும், கமலுடன் அதிக காட்சிகளில் சிம்பு இருப்பார் எனவும் சொல்லப்படுகிறது. கடைசியாக ஒஸ்தி திரைப்படத்தில் சிம்பு போலீஸாக நடித்திருந்தார் என்பது நினைவிருக்கலாம்.
இந்தியன் 2 திரைப்படத்திற்கான பூஜை போடப்பட்டு பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வாலும், இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் துல்கர் சல்மானும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதனால் இந்தியன் படத்தை விட பலமடங்கு எதிர்பார்ப்பு இப்படத்திற்கு ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











