எனக்கா ரெட் கார்டு, என்ன ஒரசிப் பார்த்தா நீ நாசம்: விஷாலை சொல்கிறாரா சிம்பு? #RedCardu
சென்னை: எனக்கா ரெட் கார்டு பாடல் மூலம் சிம்பு விஷாலுக்கு பதிலடி கொடுத்துள்ளதாக அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு, கேத்ரீன் தெரஸா, மேகா ஆகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசத்துடன் வெளியாவதாக இருந்தது.
பின்னர் சிம்புவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக அடுத்த மாதம் ரிலீஸ் செய்ய முடிவு செய்தனர்.

சிம்பு
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் வரும் எனக்கா ரெட் கார்டு பாடல் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலுக்கு சிம்பு பதிலடி கொடுப்பது போன்று நச்சென்று உள்ளதாக அவரின் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். சிம்பு ரசிகர்களுக்கு அந்த பாடல் மிகவும் பிடித்துப் போய் ரிப்பீட் மோடில் கேட்கின்றனர்.
பாடல்
சிம்பு பாடிய எனக்கா ரெட் கார்டு பாடலில், எனக்கா ரெட் கார்டு எடுத்துப்பாரு ரெக்கார்டு, அடிச்சி மிரட்டி அடிப்பேன், தெருவுல தான் இறங்கி ஆடு, உள்ள விட மாட்டேன்னு சொல்றதுக்கு நீ யாரு, வெளியே நான் போடும் ஆட்டத்துக்கு இப்ப கூட்டத்த பாரு, பட்டத பட்டுன்னு சொன்னாக்கா என்ன கெட்டவன்னு சொல்றாங்க, ஓரம் போய் உட்கார்ந்தா என்ன உத்தமன்னு சொல்றாங்க, தப்புன்னு தெரிஞ்சா டப்புன்னு கொதிக்கும் பிரச்சனை எனக்கு பாயாசம், என் பேச்சில இல்லை பொய் வேசம், என்ன ஒரசிப் பார்த்தா நீ நாசம். நான் வைக்கிற இடத்துல நிக்கிற இடத்துல தான்டா பார்ட்டி என்று பாடல் வரிகள் அமைந்துள்ளன.

சிக்கல்
அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்தபோது சிம்பு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து சிம்புவுக்கு ரெட் கார்டு கொடுக்க தயாரிப்பாளர்கள் சங்கம் முடிவு செய்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலுக்கு தன் பாடல் மூலம் பதில் அளித்துள்ளார் சிம்பு.

நிஜம்
எனக்கா ரெட் கார்டு வெறும் பாடல் அல்ல. அது சிம்புவின் குணத்தை பற்றிக் கூறுகிறது. மேலும் அவர் யாருக்கு பதிலடி கொடுக்க விரும்பினாரோ அதை பாட்டு மூலமாக கொடுத்துவிட்டார். இந்த பாடலுக்கு நிச்சயம் எதிர்ப்பு கிளம்பாது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உண்டு.


Click it and Unblock the Notifications











