சிம்புவின் ஈஸ்வரன் பட பேனருக்கு பாலபிஷேகம் செய்த ரசிகர்கள்... வைரலாகும் வீடியோ!

சென்னை : சர்ச்சைகளுக்கு நடுவில் இப்போது வெளியாகியிருக்கும் சுசீந்திரன் சிம்பு முதல் முறையாக இணையும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது.

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்திற்கு பிறகு மாநாடு, மஃப்டி, மகா என தொடர் திரைப்படங்களில் சிம்பு நடித்து வந்தாலும் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் வெளியாகவில்லை.

இதனால் அப்செட்டில் இருந்த ரசிகர்களுக்கு புல் மீல்ஸ் விருந்து கொடுக்கும் வகையில் தனது எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ள ஈஸ்வரன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்ட மனநிலைக்கு கொண்டு சென்ற நிலையில் இப்பொழுது ஈஸ்வரன் பட பேனருக்கு ரசிகர்கள் பாலபிஷேகம் செய்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

சகலகலா வல்லவரான

சகலகலா வல்லவரான

நடிப்பில் மட்டுமல்லாமல் இயக்கம், பாடல் இசை என அனைத்திலும் கைதேர்ந்த சகலகலா வல்லவரான சிம்பு தமிழ் சினிமாவில் ஈடு இணையற்ற நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இயக்கியும் நடித்தும்

இயக்கியும் நடித்தும்

சிறு வயது முதலே திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பல்வேறு வித்தைகளை கற்ற சிம்பு இப்போது தமிழ் சினிமாவில் வெற்றி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் பல திரைப்படங்களை இயக்கியும் நடித்தும் அதிலும் வெற்றி கண்டு பாக்ஸ் ஆபீசை தெறிக்கவிட்டுள்ளார்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

இந்த நிலையில் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் எதுவும் வெளியாகாமல் ரசிகர்கள் ஒருபுறம் அப்செட்டில் இருக்க, பல தயாரிப்பாளர்களும் இவரின் மீது பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்து வந்தனர். அதில் மாநாடு இயக்குனரும் ஒருவர்.

சிறப்பு தோற்றத்தில்

சிறப்பு தோற்றத்தில்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் மற்றும் வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வி பெற்ற நிலையில் 19எம் எல், காற்றின் மொழி உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றார்.

அதிக உடல் எடை

அதிக உடல் எடை

வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படத்தில் அதிக உடல் எடை தோற்றத்தில் வந்து சென்ற சிம்புவை பலரும் கலாய்த்து வந்த நிலையில் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக இப்பொழுது சுசீந்திரனுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வரும் திரைப்படத்தில் உடல் எடையை முற்றிலுமாக குறைத்து ஸ்லிம்மான சிம்புவாக மாறி உள்ளார்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

அந்தத் திரைப்படத்துக்கு ஈஸ்வரன் என்ற பெயரிடப்பட்டிருக்கும் நிலையில் நேற்று வெளியான ஈஸ்வரன் திரைப்படத்தின் இரண்டு விதமான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு இணையத்தில் வைரலாகி வந்தன.

கிராமத்து லுக்கில்

கிராமத்து லுக்கில்

ஒரு போஸ்டரில் கையில் பாம்புடன் வயல்வெளியில் நின்று கொண்டும், மற்றொரு போஸ்டரில் லுங்கியுடன் கையில் கிரிக்கெட் பேட்டை வைத்துகொண்டு, இதுவரை சிம்புவை பார்த்திராத கிராமத்து லுக்கில் வெளியாகியிருந்த இவ்விரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் ஒருபுறம் இவை இணையதளத்தில் வைரலாகி வர மறுபுறம் சிம்புவின் ரசிகர்கள் ஈஸ்வரன் பட பேனருக்கு பாலாபிஷேகம் செய்து அமர்க்களப்படுத்தி இருக்கின்றனர்.

ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

பொதுவாகா திரைப்படம் வெளியாகும்போது மட்டுமே பெரிய நடிகர்களின் புகைப்படங்களுக்கும், பேனர்களுக்கும் பாலபிஷேகம் செய்து வந்த நிலையில் இப்பொழுது சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கே பாலபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடியது பார்க்கும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X