நயன்தாராவுடன் சண்டை எதுவுமில்லை: சொல்கிறார் சிம்பு

By Mayura Akilan

எனக்கும் நயன்தாராவிற்கும் இடையே எந்த சண்டையும் இல்லை, கருத்து வேறுபாடும் இல்லை என்று சிம்பு விளக்கம் அளித்துள்ளார். பாட்டு சூட்டிங்கிற்காக வெளிநாடு செல்லப்போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘இது நம்ம ஆளு' படத்தை பாண்டிராஜ் இயக்குகிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைக்கிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.

இதனிடையே நாயகன் சிம்புவுக்கும் நாயகி நயன்தாராவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும். இதனால் இது நம்ம ஆளு படத்தின் வேலைகள் நிறைவு பெறாமல் தாமதமாவதாகவும் செய்திகள் பரவின. இதற்கு சிம்பு பதில் அளித்துள்ளார்.

படப்பிடிப்பு நிறைவு

படப்பிடிப்பு நிறைவு

அவர் கூறும்போது, இது நம்ம ஆளு படத்தின் வசன காட்சிகள் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது.

பாட்டு மட்டும் பாக்கி

பாட்டு மட்டும் பாக்கி

இந்த படத்தில் ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே இன்னும் பாக்கி உள்ளது. இந்த பாடல் காட்சியை வெளிநாட்டில் படமாக்க திட்டமிட்டு உள்ளோம்.

டிசம்பரில் ரிலீஸ்

டிசம்பரில் ரிலீஸ்

அதன் பிறகு தொழில்நுட்ப பணிகள் துவங்கும். டிசம்பரில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பிரிந்த காதலர்கள்

பிரிந்த காதலர்கள்

சிம்புவும், நயன்தாராவும் முன்பு காதலர்களாக இருந்து பிரிந்தவர்கள். இடையில் நயன்தாரா பிரபு தேவாவையும், சிம்பு ஹன்சிகாவையும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின.

திரையில் ஜோடியாக

திரையில் ஜோடியாக

இதனிடையே நயன்தாரா - பிரபுதேவா காதல் முறிந்து போனது. சிம்புவும் நயன்தாராவும் இது நம்ம ஆளு படத்தில் இணைந்த நேரத்தில் சிம்புவிற்கு ஹன்சிகா உடனான காதல் உடைந்து போனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X