என்ன அழகுடா சாமி.. மாநாடு பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு எடுத்த செம க்யூட் செல்பி.. வைரலாகுது!

சென்னை: பெண்களின் மனங்களை இப்போதும் தன்னால் கவர முடியும் என்பதை செம க்யூட்டான செல்பி போட்டு நடிகர் சிம்பு மீண்டும் நிரூபித்துள்ளார்.

மாநாடு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தபடி சிம்பு எடுத்து வெளியிட்ட சூப்பர் செல்பி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#Maanaadu என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி சிம்பு ரசிகர்கள் வெறித்தனமாக அந்த செல்பி புகைப்படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அதிரடி கம்பேக்

அதிரடி கம்பேக்

வந்தா எப்பவுமே சிம்பு ராஜாதான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். எத்தனை படங்கள் தோல்வி அடைந்தாலும், படங்களே வரவில்லை என்றாலும் சிம்புவை ஒருபோதும் அவரது ரசிகர்கள் விட்டுக் கொடுத்ததே இல்லை. அப்படிப்பட்ட தனது ரசிகர்களுக்காக மட்டுமே இப்போ இப்படி அதிரடியாக மாறியுள்ளார் சிம்பு.

சூப்பர் க்யூட் செல்பி

சூப்பர் க்யூட் செல்பி

சமீபத்தில் மாநாடு படத்தின் ஷூட்டிங் தொடங்கப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியான நிலையில், தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சூப்பர் க்யூட் செல்பியை தனது ரசிகர்களுக்காக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் சிம்பு வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

அள்ளுது லைக்ஸ்

அள்ளுது லைக்ஸ்

ரசிகைகளின் ஹாட் ஃபேவரைட்டான சிம்புவின் இந்த செம க்யூட் செல்பியை பார்த்த ரசிகர்கள் லட்சக் கணக்கில் லைக்குகளை குவித்து வருகின்றனர். #Maanaadu என்ற ஹாஷ்டேக்கையும் உருவாக்கி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இப்படித்தான் சிம்புவை பார்க்க வேண்டும் என எதிர்பார்த்த ரசிகர்களின் எதிர்பார்ப்பு தற்போது பூர்த்தியாகி உள்ளது.

அசத்தும் அப்துல் காலிக்

அசத்தும் அப்துல் காலிக்

ஈஸ்வரன் படத்தில் கிராமத்து இளைஞராக தோற்றமளிக்கும் சிம்பு, வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் அப்துல் காலிக் கதாபாத்திரத்தில் மாடர்ன் இளைஞராக செம ஸ்மார்ட்டாகவும் ஷார்ப்பாகவும் மாறியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகின. சீக்கிரமே சிம்புவை திரையில் காண ரசிகர்கள் ஆர்வம்.

பொங்கலுக்கு ஈஸ்வரன்

பொங்கலுக்கு ஈஸ்வரன்

இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஈஸ்வரன் திரைப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. சமீபத்தில் உடல் மெலிந்து செம ஸ்லிம்மான தோற்றத்தில் பாம்பும் கையுமாக இருக்கும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அதிரடியான டீசர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்தது குறிப்பிடத்தக்கது.

மஹா என்னாச்சு?

மஹா என்னாச்சு?

ஹன்சிகா மோத்வானி நடிப்பில் உருவாகிய மஹா படத்தில் தான் சிம்புவை ரசிகர்கள் முதலில் கண்டு ரசிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக ஈஸ்வரன் வெளியாகி விடும் என்பது உறுதியாகி உள்ளது. சிம்பு, ஹன்சிகா நடிப்பில் உருவான மஹா படம் என்ன ஆச்சு என்றே தெரியவில்லை என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X