சோஷியல் மீடியாவை மிரள வைத்த மாநாடு.... மாஸாக தெறிக்க விட்ட ரசிகர்கள்

சென்னை : டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். கல்யாணி பிரியதர்ஷினி ஹீரோயினாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அரசியல் த்ரில்லர் படமான மாநாடு படம் ஆரம்பிக்கப்பட்டது முதலே பல தடைகளை சந்தித்து வருகிறது. 2019 லேயே இந்த படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டு, ஆர்வத்தை தூண்டியது. ஆனால் மற்ற படங்களைப் போல் கொரோனா, லாக்டவுன் உள்ளிட்ட பல காரணங்களால் இந்த படத்தின் வேலைகள் தள்ளி போனது.

 தியேட்டரில் தான் ரிலீஸ்

தியேட்டரில் தான் ரிலீஸ்

ஒரு வழியாக போராடி இந்த ஆண்டு துவக்கத்தில் ஷுட்டிங்கை முடித்தனர். மே 14 ம் தேதியே ரம்ஜானை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு ஆரம்பத்தில் திட்டமிட்டது. ஆனால் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள், கொரோனா இரண்டாம் அலை, தியேட்டர்கள் மூடல் போன்ற பல்வேறு காரணங்களால் தொடர்ந்து இந்த படம் தள்ளி போனது. அதே சமயம், எவ்வளவு தாமதம் ஆனாலும் மாநாடு படத்தை தியேட்டரில் தான் ரிலீஸ் செய்வோம் என படக்குழு உறுதியாக இருந்தது.

தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்

தள்ளி வைக்கப்பட்ட ரிலீஸ்

அதற்கு பிறகும் பலமுறை எதிர்பார்க்கப்பட்டும் ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பை படக்குழு வெளியிடவில்லை. ரசிகர்களும் தொடர்ந்து அப்டேட் கேட்டு வந்தனர். ஆனால் தயாரிப்பாளரோ நீண்ட சஸ்பென்சிற்கு பிறகு தீபாவளியான நவம்பர் 4 ம் ஆண்டு மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய போவதாக அறிவித்தார். ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வந்த நிலையில், கடைசி நிமிடத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

குழப்பத்தில் ரசிகர்கள்

குழப்பத்தில் ரசிகர்கள்

பிறகு நவம்பர் 25 மாநாடு ரிலீஸ் என அறிவித்தனர். தொடர்ந்து நவம்பர் 27 ரிலீசாக உள்ளதாக தகவல் பரவியது. டிக்கெட் புக்கிங் ஒரு பக்கம் நடந்து வந்தாலும் ரிலீஸ் தேதி எது என தெரியாமல் ரசிகர்கள் குழம்பினர். ஒரு வழியாக நவம்பர் 25 ல் ரிலீசாக உள்ளதை ட்விட்டரில் உறுதி செய்தார் எஸ்.ஜே.சூர்யா.

தயாரிப்பாளரை திணற வைத்த ரசிகர்கள்

தயாரிப்பாளரை திணற வைத்த ரசிகர்கள்

ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் மாநாடு ரிலீஸ் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேதி பிறகு அறிவிக்கப்படும் என நேற்று மாலை ட்வீட் போட்டார் சுரேஷ் காமாட்சி. டிக்கெட்டை புக் செய்து விட்டு காத்திருந்த ரசிகர்கள், தயாரிப்பாளரின் இந்த அறிவிப்பால் சோஷியல் மீடியாவில் கொந்தளித்து, சுரேஷ் காமாட்சியை கேள்விகளால் வறுத்தெடுத்தனர். இந்நிலையில் நவம்பர் 26 ல் மாநாடு ரிலீஸ் என அறிவித்தனர்.

பாசிடிவ் விமர்சனங்கள்

பாசிடிவ் விமர்சனங்கள்

இதைத் தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு மாநாடு பிரஷ் ஷோ திரையிடப்பட்டது. அனைத்து தரப்பினரிடமும் பாசிடிவ் விமர்சனங்களை மாநாடு படம் பெற்றுள்ளது. இரண்டாவது பாதி அனைவரையும் சீட் நுனியில் வந்து அமர வைக்கிறது என பலர் புகழ்ந்து தள்ளி இருந்தனர். இதற்கிடையே ஆரம்ப சீன் வீடியோவை லீக் செய்து பரபரப்பை கிளப்பினார் பிரேம்ஜி அமரன்.

திரும்பிய பக்கமெல்லாம் மாநாடு

திரும்பிய பக்கமெல்லாம் மாநாடு

பிரச்சனைகள் தீர்ந்து, மாநாடு படம் ரிலீஸ் உறுதி என நேற்று இரவு தகவல் வெளியானது முதலே சோஷியல் மீடியாக்களில் எங்கு திரும்பினாலும் மாநாடு போஸ்டர், வீடியோ, கருத்து என சிம்பு ரசிகர்கள் தெரிவிக்க விட்டு வருகிறார்கள். ட்விட்டரில் சிலம்பரசன், மாநாடு ஹாஷ்டாக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கினர். ட்விட்டர், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் என அனைத்தையும் மாநாடு ஆக்கிரமித்து விட்டது. மீம்ஸ் கூட மாநாடு ரிலீசை வைத்து தான் உருவாக்கி வருகிறார்கள்.

மிரண்டு போன திரையுலகினர்

மிரண்டு போன திரையுலகினர்

மாநாடு படத்திற்கு ரசிகர்களின் ஆதரவு எந்த அளவிற்கு உள்ளது என்பதை இது காட்டி உள்ளது. இரவு முழுவதும் பலர் போன், மெசேஜ் செய்து ஆதரவும், தைரியமும் தந்ததாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும் ட்வீட் செய்திருந்தார். மாநாடு படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, திரையுலகையே மிரள வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X