சிம்பு நிஜமாவே உடம்பை குறைச்சிட்டார்.. பாருங்க அதுக்கு சாட்சி இந்த போஸ்டர் தான்!
சென்னை: இந்த ஆண்டு ஜனவரி மாதம் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியானது. ஆனால், அந்த படத்தில் யோகி பாபுவுக்கும் சிம்புவுக்கும் வித்தியாசம் தெரியவில்லை என ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்ட பலர் கலாய்த்திருந்தனர்.
அடுத்தது மாநாடு, மஃப்டி என அடுத்தடுத்து டிராப் செய்திகளே சிம்பு பற்றி வெளியாகின.
இந்நிலையில், சபரி மலைக்கு போயிட்டு கம்பேக் ஆகியுள்ள சிம்பு, ஹன்சிகாவின் மஹா படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
தற்போது வெளியாகியுள்ள அந்த போஸ்டர் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மஹா
மதியழகன் தயாரிப்பில் ஜமீல் இயக்கத்தில் ஹன்சிகா ஹீரோயின் சென்ட்ரிக் படம் பண்ணுகிறார் என ரொம்ப மாதங்களுக்கு முன்பு ஒரு சில போஸ்டர்கள் வந்து இணையத்தில் சர்ச்சையை கிளப்பியது. ஆனால், இது வரை படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த எந்தவொரு அறிவிப்பும் படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள மஹா போஸ்டர் சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
மாநாடு இயக்குநர் வாழ்த்து
சிம்புவின் மாநாடு படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஆன்மிக யாத்திரைகளை முடித்து வந்த நடிகர் சிம்பு, ஹன்சிகாவின் மீது படுத்திருக்கும் படு ரொமான்டிக் போஸ்டரை ஷேர் செய்து மஹா படக்குழுவுக்கு வெங்கட் பிரபு வாழ்த்துக் கூறியுள்ளார்.
மரண வெயிட்டிங்
மஹா போஸ்டரில் சிம்புவை பார்த்த ரசிகர்கள் மாநாடு படத்திற்காக மரண வெயிட்டிங் தலைவா என வெங்கட் பிரபுவின் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்டுகளை தெறிக்கவிட்டு வருகின்றனர்.
எஸ்.டி.ஆர். இஸ் பேக்
மஹா படத்தில் ஸ்பெஷல் அப்பியரன்ஸ் கொடுக்கவுள்ள சிம்புவின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ள நிலையில், எஸ்.டி.ஆர். இஸ் பேக் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
தரமான சம்பவமா இருக்கணும்
வெங்கட் பிரபு சார் நம்ம மாநாடு தரமான சம்பவமா இருக்கணும் என வெங்கட் பிரபு மற்றும் சிம்புவின் ரசிகர்கள் அவருக்கு அன்புக் கட்டளையிட்டு வருகின்றனர்.
இந்த படமாவது
இந்த படமாவது டிராப் ஆகாம இருக்குமா என நடிகர் சிம்புவை இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.
பஞ்சு மெத்தை
ஹன்சிகா மேல் சிம்பு படுத்திருக்கும் மஹா போஸ்டரை பார்த்த இந்த நெட்டிசன் சிம்பு பஞ்சு மெத்தையில் நிம்மதியாக தூங்குகிறார் என கலாய்த்துள்ளார்.
ஏன் வீட்டுல பெட் இல்லையா
ஏன் வீட்டுல மேட்ரஸ் இல்லையா என இந்த நெட்டிசன் சிம்பு - ஹன்சிகா போஸ்டரை ட்ரோல் செய்துள்ளார்.
மாநாடு எங்கே?
மஹா இங்க இருக்கு.. மாநாடு எங்கே? என வாழைப்பழ காமெடி புகைப்படத்தை போட்டு இந்த நெட்டிசன் கிண்டலடித்துள்ளார். மேலும், பல நெட்டிசன்கள் இந்த போஸ்டரை பார்த்து படு கேவலமாக கழுவி ஊற்றி வருகின்றனர். அதே சமயம் சிம்பு ரசிகர்கள், தலைவன் வந்துட்டான் என கொண்டாடி வருகின்றனர். சிம்புவுக்கு மாநாடுக்கு முன்னாடி மஹா கை கொடுக்கிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











