'த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா' ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு?

By Manjula

சென்னை: அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் அடுத்த படத்தில் சிம்பு நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஜி.வி.பிரகாஷின் த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆதிக் ரவிச்சந்திரன்.

Simbu's Next Movie with Adhik Ravichandran

ஜி.வி.பிரகாஷ், ஆனந்தி, மனிஷா யாதவ் நடிப்பில் அடல்ட் காமெடியாக வெளியான இப்படம் வசூல் ரீதியாக வெற்றிப் படமாக மாறினாலும் பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பினைப் பெற்றது.

இந்நிலையில் சிம்புவை நாயகனாக வைத்து ஆதிக் ரவிச்சந்திரன் தனது அடுத்த படத்தை இயக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

சிம்புவிடம் கதையை சொல்லி ஆதிக் ரவிச்சந்திரன் சம்மதம் வாங்கி விட்டதாகவும், விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்றும் கூறுகின்றனர்.

இந்தப் படத்தை முழுக்க முழுக்க இளைஞர்களுக்கான பொழுதுபோக்குப் படமாக ஆதிக் ரவிச்சந்திரன் உருவாக்கவிருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X