முதல் படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூல்.. அந்த இயக்குநருடன் சேரும் சிம்பு?.. எஸ்டிஆர் செம பிளான்
சென்னை: தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சிம்பு. இடையில் ஏற்பட்ட சின்ன சறுக்கலை சரி செய்துவிட்டு இப்போது செம பிஸியாக நடித்துவருகிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் படத்தை முடித்துவிட்டு அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். மேலும் தேசிங்கு பெரியசாமியுடனான திரைப்படமும் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனது கரியர் பயணத்தை இன்னும் ஃப்ரெஷ்ஷாக்க சென்சேஷனல் இயக்குநர் ஒருவருடன் சேரவிருக்கிறாராம் எஸ்டிஆர்.
கோலிவுட்டுக்கு புதுமுக இயக்குநர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். அவர்களின் படங்கள் அடுத்தடுத்து ஹிட்டாகும்போது அவர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என சீனியர்களும் நினைப்பார்கள். ரஜினிகாந்த், கமல்ஹாசன் எல்லாம் அதில் முன்னோடி. லோகேஷ் கனகராஜ் சென்சேஷனலாக மாறியபோது விக்ரமில் லாக் செய்தார் கமல். அதேபோல் ஹெச்.வினோத்தை அஜித், லோகேஷை விஜய், நெல்சன் திலீப்குமாரை ரஜினி உள்ளிட்டோர் தங்கள் குட் புக்கில் வைத்திருக்கிறார்கள்.

சிம்புவும் அந்த லிஸ்ட்டில்: அவர்கள் வழியை அடுத்த லெவல் ஹீரோக்களும் ஃபாலோ செய்ய தொடங்கிவிட்டார்கள். சிவகார்த்திகேயனை வைத்து அமரன் படத்தை இயக்கி மெகா ஹிட் கொடுத்த ராஜ்குமார் பெரியசாமியை தன்னுடைய இயக்குநராக ஃபிக்ஸ் செய்தார் தனுஷ். இப்போது சிம்புவும் அந்த லிஸ்ட்டில் இணைந்திருக்கிறாராம். முதல் இன்னிங்ஸ் போல் இல்லாமல் இரண்டாவது இன்னிங்ஸை தரமாக கொண்டு செல்ல பிளான் செய்திருக்கிறார் எஸ்டிஆர். அதனால்தான் மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் என விதவிதமான ஜானர்களில் நடித்தார்.
ஃபுல் ஃபார்மில்: இப்போதோ முழுக்க முழுக்க இளம் இயக்குநர்களின் பக்கம் அவரது கவனம் சென்றுவிட்டது. சீனியருடன் பணியாற்றுவது என எடுத்துக்கொண்டால் வெற்றிமாறனின் அரசன் படம் மட்டும்தான் சிம்பு கைகளில் இருக்கிறது. அது தவிர்த்து அஷ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோருடன் கூட்டணிக்கு சென்றார். இந்த நிலையில் இன்னொரு இளம் இயக்குநருடனும் எஸ்டிஆர் இப்போது சேரவிருப்பதாக கூறப்படுகிறது. அது அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.
யார் அந்த இயக்குநர்?: அந்த இயக்குநர் வேறு யாரும் இல்லை. டியூட் படத்தை இயக்கிய கீர்த்திஸ்வரன்தான் அவர். சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக இருந்து வேலைகளை கற்ற கீர்த்தி; பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் உள்ளிட்டோரை வைத்து டியூட் படத்தை இயக்கினார். அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. முற்போக்கான ஒரு கருத்தை ஜென் ஸி தலைமுறையினருக்கு அவர்கள் ஸ்டைலில் சொல்லி ரகளை கட்டியிருந்தார் இயக்குநர். அந்தப் படம் நூறு கோடி ரூபாயை அள்ளியது.
விரைவில் அறிவிப்பு: அந்தப் படத்தின் பல காட்சிகள் கொண்டாடப்பட்டன. கண்டிப்பாக கீர்த்திக்கு பெரிய எதிர்காலம் இருப்பதாகவும் பலர் கணித்தார்கள். இயக்குநர் பா.இரஞ்சித்கூட படத்தை வெகுவாக பாராட்டியிருந்தார். அப்படிப்பட்ட கீர்த்திஸ்வரனுடன் சிம்பு இணைய; சாய் அபயங்கர்தான் அந்தப் படத்துக்கு இசையமைக்கவிருக்கிறாராம். மிக விரைவில் அந்தப் படம் பற்றிய அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
